விசைப்பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
[[File:Apollo 15 launch.jpg|thumb|150px|right|சூடான வளிமங்களின் தாரைகள் விறிசை உந்துகின்றன.]]
[[ஏவூர்தி]] அல்லது விறிசு ஓரு சிறிய துவாரத்திலிருந்து விரைவாக வெளியேற்றப்படும் வளிமத் தாரைகளால் இயக்கப்படுகிறது. இந்த வளிமம் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேதிப்பொருளை எரிப்பதன் மூலம் மிக உயர்நிலையில் சூடாக்கப்பட்ட வளிமம் வெளிப்படுத்தப்படலாம். இவை இயக்க மிக எளிமையாக இருந்தபோதும் இவற்றின் திறன் மிகவும் வலியது. விண்வெளியின் வெற்றிடத்தில், வேறெந்த உந்துகையும் இல்லாதவிடத்திலும், இவற்றால் இயங்க இயலும்.
==மின்சார இயக்கிகள்==
[[File:AC motor.jpg|thumb|right|150px|மின்சார இயக்கி]]
[[மின்சார இயக்கி]]கள் எரிபொருளைப் பயன்படுத்துவதில்லை. மின்சார ஆற்றல் கம்பிகள் வழியாகப் பெறப்படுகின்றன. இந்த மின்சாரத்தை வேறெங்காவது தொலைவில் எரிபொருளைப் பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம். இந்த மின்னாற்றல் இயந்திர இயக்கமாக மாற்றப்படுகின்றது. மின்னாற்றலால் வலிய [[காந்தம்|காந்தப்புலம்]] ஏற்படுத்தப்பட்டு இயக்கியின் தண்டினைச் சுழற்ற கட்டுப்படுத்தப்படுகிறது.
 
தொடருந்து [[உந்துப் பொறி]]கள் மின்சார இயக்கிகளால் இயக்கப்படும் மின் பொறியாகும்.
==இவற்றையும் காண்க==
*[[டீசல் பொறி]]
*[[நீராவிப் பொறி]]
*[[விசையாழி]]
*[[மின்சார இயக்கி]]
*[[உள் எரி பொறி]]
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/விசைப்பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது