தினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.
 
==சாகுபடி முறை==
 
* தினை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள மணல்பாங்கான மண்வகை ஏற்றது.
* இதன் சாகுபடி காலம் 3 மாதங்கள். ஆடி, ஆவணி ஆகிய பட்டங்கள் ஏற்றவை.
* முதலில் இரண்டு சால் சட்டிக் கலப்பையிலும், அடுத்து இரண்டு சால் கொக்கிக் கலப்பையிலும் குறுக்கு-நெடுக்காக உழவு செய்ய வேண்டும்.
* இரண்டு கிலோ விதையை 5 கிலோ மணலுடன் கலந்து, 2 லிட்டர் பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து நிழலில் உலர்த்தி விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
* பிறகு விதைத்து கொக்கிக் கலப்பை மூலம் ஒரு உழவு செய்ய வேண்டும்.
* மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே 7-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும்.
* மழை இல்லாத நேரங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினாலே போதுமானது. * இருபதாம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்ளும்.
* இருபதாம் நாள் மற்றும் 40 மற்றும் 60-ம் நாட்களில் 60 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும்.
* இதற்கு மேல் எந்த உரமுத் இடத் தேவையில்லை.
* தினையைப் பூச்சி, நோய் தாக்காது.
* எழுபதாம் நாளில் கதிர் பிடித்து, 90-ம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.
* ஏக்கருக்கு சராசரியாக 800 கிலோ வரையில் விளைச்சல் கிடைக்கும்.
 
== புராணத்தில் தினை ==
"https://ta.wikipedia.org/wiki/தினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது