கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது.சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு.உலகில் சில நாடுகளில் கழுகுகளை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.1940க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது.காடுகளை அளித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர்.இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது.இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன.இது பாரிய பிர்ரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதை தடுக்க முடியாதுள்ளது.
 
== கழுகினங்கள் ==
=== எலும்புண்ணிக் கழுகு ===
எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் [[மலை]]ப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. [[இந்தியா]]வின் வடபகுதியிலும், [[திபெத்]], [[ஆப்கானிஸ்தான்]], [[ஆப்பிரிக்கா]] தென் [[ஐரோப்பா]] ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% [[எலும்பு|எலும்பாக]] இருப்பதால்<ref>Handbook of the Birds of the World, Volume 2. p.84 and p. 125</ref> இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்[[பாறு]] [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டில்]] ''கழுகுவரிசையில்'' (Falconiformes, ''`வால்க்கனி`வார்ம்ஸ்'') ''ஆக்ஸிபிட்ரிடீ'' (Accipitridae) என்னும் குடும்பத்தில், ''ஜிப்பீட்டஸ்'' (Gypaetus) என்னும் [[பேரினம்|பேரினத்தில்]], எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும்.
 
=== வெண்தலைக்_கழுகு ===
வெண்தலைக் கழுகு (''Haliaeetus leucocephalus''), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினங்களில்]] ஒன்று (மற்றையது [[பொன்னாங் கழுகு]]). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]] வாழ்கின்றன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது