மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''மின்தடையம்''' (''Resistor''), '''மின்தடையி''', '''மின்தடையாக்கி''' அல்லது பொதுவாகத் '''தடை''' என்பது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] எதிர்க்கும் ஒரு [[மின் உறுப்பு]] ஆகும். [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த [[மின்சுற்று|மின் சுற்றுக்களில்]], [[இலத்திரனியல்]] சாதனங்களில் பயன்படுகின்றது.
ஒருபொருள் [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] ஏற்படுத்தும் தடையானது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் மின்[[மின்கடத்துதிறன் தடைமம்மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே [[மின்னோட்டம்]] பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும்.
 
மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், [[தொகுப்புச் சுற்று]]கள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது