ஓடப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பெயர் மரபு== ===கர்ண பரம்பரை கதை
வரிசை 10:
கப்பற்பாட்டு, ஓடப்பாட்டு என வரும் பாடல்களில் 'ஏலேலோ' என்று முடிவது பொது [[இலக்கணம்]] ஆகும். இந்தத் தொடர் உண்டானதற்குக் காரணம் ஒன்று, கர்ணபரம்பரையாக(காலங்காலமாக/நீண்ட நாட்களாக) ஒரு கதை வழங்கி வருகிறது. அது யாதெனில், [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கப்பல் வாணிகராகவும், பெருஞ்செல்வந்தராகவும் விளங்கிய ஏலேலசிங்கர், [[திருவள்ளுவர்|திருவள்ளுவருடைய]] நண்பராக இருந்தார். அவர் ஏழைகளுக்கு வேண்டியவற்றை எல்லாம் வாரி வழங்குபவர். [[கப்பல்]] தொழிலாளிகளுக்கும், ஓடக்காரர்களுக்கும் தங்கள் தொழிலை ஆற்றும் போது, ஏலேலசிங்கர் பெயரைச் சொல்லி வாழ்த்துவதற்கு 'ஏலேல' என்று முடியும்படி பாடுவார்களாம். அதுமுதல் 'ஏலேலோ' என்பது ஓடப்பாட்டின் வாய்பாடாக அமைந்து விட்டதாம்.
===இலக்கணமரபு===
''எலா, எல்லா, ஏல'' என்பவை தோழியையும், தோழனையும் அழைக்கப் பயன்படுத்தப்பட்ட பழையச்சொற்கள் ஆகும். தன்தோழனைப் பார்த்து பாடுகிறவன், பாட்டின் இடையிடையே ஏல என்று சொல்ல, அது இரட்டித்து, 'ஏலேலோ' என்று ஆகி வந்திருக்கலாம் என்று கருத்தும் உண்டு. ஏலஏல என்னும் தொடர் ஏலேல என்று ஆகிவிடும். இது தமிழ் மரபுக்கு பொருத்தமானது என்று [[கி. வா. ஜகந்நாதன்|கி.வா.ஜ.]] போன்ற எழுத்தாளர்கள் உரைக்கின்றனர்.
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது