அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்னர் அங்கேயே அவர் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1956 இல் இவர் உயர்மதிப்புடைய இருசெவிக் கேளொலி தரும் ஒலிபெருக்கிக் கருவிகள் வாங்கிப் பயன்படுத்தியபொழுது அவற்றின் தரம் இவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. நேரடியாக நிகழும் நிகழ்ச்சிகளின் இயல்புத்தன்மையைச் சரியான துல்லியத்துடன் மீளுருவாக்கவில்லை என்று உணர்ந்தார். இதுவே இவரை ஒலிபெருக்கிப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டியதாகும். அப்பொழுது ஒலிபெருக்கி நுட்பத்தில் இருந்த குறைபாடுகளை முறையாக ஆய்ந்தார். இவர் செய்த ஒலிசார் ஆய்வுகளின் பயனாய் ஒரு பெரிய அரங்கில் கேட்கக்கூடிய ஒலிகளை (பொருள்களின் மீது பட்டு எதிரும் ஒலிகளின் விளைவுகளையும்) வீட்டில் கேட்கும்படியான இருசெவி கேளொலி தரும் ஒலிபெருக்கிகளைக் கண்டுபிடித்தார். [[ஒலிக்கேளுணர்வியல்]] (psychoacoustic) துறையில் இவருடைய குவியம் இருந்ததே இவர் நிறுவிய ஒலிபெருக்கி வணிக நிறுவனத்துக்கு அடிப்படையாக இருந்தது.
 
போசு தான் நிறுவ விரும்பிய தொழில்நிறுவனத்துக்குத் தேவைப்பட்ட முதலீட்டை நன்னம்பிக்கை முதலீட்டாளர்களிடம் (ஏஞ்சல் முதலீட்டாளர்) இருந்து பெற 1964 இல் அணுகினார். அவர்களுள் இவருடைய முனைவர்ப் பட்ட நெறியாளர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒய். தபிள்யூ. இலீ ( Y. W. Lee) அவர்களும் ஒருவர். இன்றளவும் போசு நிறுவனத்திற்கு முக்கியமான புத்தாக்க உரிமங்களை போசு பெற்றிருந்தார். இந்தப் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஒலிபெருக்கியின் வகுதி (design) பற்றியும் நேர்சார்பிலா இரு-நிலை மாறுகையுடைய [[டி-வகுப்பு மிகைப்பிகள்மிகைப்பி]]கள் (Class D Amplifiers) பற்றியதாகும். இன்று இந்த போசு நிறுவனம் உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 9,000 பணியாள்களுடன் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனம். போசின் தொழில்நிறுவனம் தனியார் நிறுவனமாகவே இன்றளவும் உள்ளது, இது பற்றி 2004 இல் திரு போசு, பாப்புலர் சயன்சு என்னும் இதழுக்குத் தந்த நேர்காணலில், தான் பணம் ஈட்டுவதற்காக (மட்டும்) இத்தொழில் நிறுவனத்தை நிறுவவில்லை என்றும், தான் தொழிலில் நுழைந்ததற்கான காரணம் இதுவரை முன்பு செய்யாத, ஆர்வமூட்டுவனவற்றைச் செய்யவே என்றும் கூறினார் ("I would have been fired a hundred times at a company run by MBAs. But I never went into business to make money. I went into business so that I could do interesting things that hadn't been done before.")
 
இவர் போசு நிறுவனத்தின் பொறுப்பாளியாக இருந்த அதே நேரம் [[மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம்|எம்.ஐ.டி யில்]] 2001 ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் இருந்தார். தன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்கை (வாக்களிக்கவியலா பங்குகளை), எப்பொழுதும் விற்கலாகாது என்னும் கட்டுப்பாடுடன் எம்.ஐ.டி-க்கு வழங்கினார் <ref>Gift to MIT from Amar Bose Raises Tax Questions by Stephanie Strom. New York Times. April 30, 2011.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது