திருவிதாங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
== வரலாறு ==
 
சேரநாட்டின் தென்பகுதியில் [[ஆய்நாடு]], வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு [[பொதியமலை]] சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் [[திருவல்லா]] வரை பரவியிருந்தது. சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் ஆய்நாடு நீங்கலான உட்பகுதிகளை உள்ளடக்கிய [[கொல்லம்|கொல்லத்திற்கு]] அப்பால் வரை சான்றோர் அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது. கி.பி 9ம் நூற்றாண்டில் [[சேரர்|சேர]] பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், [[பிற்கால சோழர்கள்|பிற்காலச் சோழர்களின்]] தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது<ref> பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு</ref>. இப்படியாக வேணாடு, தற்போதைய [[இந்தியா]]வில் தமிழ் நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தையும்]], [[கேரளா|கேரள]] மாநிலத்தின் [[கொல்லம் மாவட்டம்|கொல்லம்]], [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம்]] ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் [[திருவிதாங்கோடு|திருவிதாங்கோடும்]] பின்பு [[கல்குளம்|கல்குளமும்]] வேணாட்டின் தலைநகராக இருந்தன.
இப்பகுதி சங்ககாலத்தில் ''ஆய்'' மரபினரால் ஆளப்பட்டு வந்தது. இதன்பின்னர் [[சோழர்]], [[பாண்டியர்]] ஆகியோருடன் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதி [[வேணாடு]] என அழைக்கப்பட்டது. இதனை ஆண்டுவந்தவர்கள் பலம் குறைந்தவர்களாக இருந்ததால், வெளியில் [[நாயக்கர்]]களிடம் இருந்தும், உள்ளூர் தலைவர்களிடம் இருந்தும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன.
 
சேர மன்னன் [[சேரமான் பெருமாள்]] காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்<ref> பக். 3, A history of Malayalam Language and Literature, கிருட்டிண சைன்யா</ref>. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் [[அகதி|அகதிகளாக]] வந்து தங்கியிருந்த [[யூதர்கள்|யூதர்களுக்கு]] குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்<ref> பக். 6, A History of Kerala</ref>.
 
நடுக் கால வரலாற்றில் (கி.பி 650 முதல் 966 வரை) இப்பகுதி [[பாண்டியர்|பாண்டியர்களின்]] படையெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கி. பி. [[முதலாம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[பிளினி]] என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் [[வாசனைத் திரவியம்|வாசனைத் திரவியங்கள்]] தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட [[திருச்சூர்|திருச்சூருக்குக்]] கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். [[ஆய் வேளிர்]] எனப்பட்டோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப்பகுதிகளை ஆண்டுவந்தனர்.
 
இவ்வேணாட்டின் கடைசி மன்னன் [[மார்த்தாண்ட வர்மர்|மார்த்தாண்ட வர்மனுக்கு]] பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால் [[திருவிதாங்கூர்]] அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
== மார்த்தாண்ட வர்மா ==
"https://ta.wikipedia.org/wiki/திருவிதாங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது