நீதித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 6:
 
ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக் காலங்களில் நீதித்துறை பொருளியல் சிக்கல்களிலும் பொருளியல் உரிமைகளிலும் முனைப்புக் காட்டி வருகிறது.<ref>Posner R. The Constitution as an Economic Document. The George Washington Law Review, November 1982, Vol. 56. No. 1</ref> 1980களில் [[இந்திய உச்ச நீதிமன்றம்]] வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக பல [[பொது நலன் வழக்கு]]களை ஏற்று [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசமைப்பின்]] பல அங்கங்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்து வந்துள்ளது.<ref>Jeremy Cooper, ''Poverty and Constitutional Justice'', in ''Philosophy of Law: Classic and Contemporary Readings'', edited by Larry May and Jeff Brown, Wiley-Blackwell, UK, 2010.</ref>
பல [[வளர்ந்துவரும் நாடுகள்|வளர்ந்துவரும் நாடுகளிலும்]] மாறிவரும் நாடுகளிலும் நீதித்துறையின் [[வரவு செலவுத் திட்டம்|வரவுசெலவுத் திட்டத்தை]] முழுமையாக நிர்வாகத்துறையே கட்டுப்படுத்துகிறது. இதனால் நீதித்துறை நிதி ஆதாரங்களுக்கு அரசையே நம்பி உள்ளது. இதனால் அதிகாரப் பிரிவினை பாதிக்கப்படுவதுடன் நீதித்துறையின் தனித்தன்மையும் பாதிக்கப்படுகிறது. நீதித்துறையில் நிலவும் ஊழல் இருவகைப்பட்டது: ஒன்று,அரசால் வழங்கப்படும் சலுகைகளும் பல்வேறு திட்டச் செலவுகளும் கொண்டது; மற்றது தனிநபர்களிடமிருந்தானது.<ref>{{cite book |first= Peter |last=Barenboim |title= Defining the rules |publisher= The European Lawyer |volume= Issue 90 |date=October 2009}}</ref> சிலநாடுகளில் நீதியரசர்களின் நியமனமும் இடமாற்றங்களும் நிர்வாகத்துறையால் கையாளப்படுகிறது. இதுவும் நீதியரசர்களை நிர்வாகத்துறைக்கு சாதகமாக தீர்வுகள் காண தூண்டுகின்றன.
 
"நீதித்துறை" என்ற சொல் சிலநேரங்களில் நீதிமன்ற அமைப்புக்களைத் தவிர அங்கு பணியாற்றும் நீதிபதிகள், [[நீதித் துறை நடுவர்]]கள் மற்றும் பிற பிணக்கு தீர்வாளர்களையும்அவர்களுக்கு துணை புரியும் அலுவலர்களையும் ஒடுமொத்தமாகக் குறிப்பிடலாம்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீதித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது