பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
|}
 
'''பெர்லின்''' [[ஜெர்மனி]] நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 [[மில்லியன்]] மக்கள் வசிக்கின்றனர். இது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] இரண்டாவது அதிக [[மக்கள்தொகை]] கொண்ட நகரமாகும். [[13ம் நூற்றாண்டு|பதின்மூன்றாம் நூற்றாண்டளவில்]] இருந்து இந்நகரம் உள்ளது. இது [[கிழக்கு ஜெர்மனி]]யில் [[போலந்து]] எல்லையிலிருந்து 110 [[கிலோமீட்டர்]] மேற்காக அமைந்துள்ளது.
 
'''சுகாதார வசதிகள்'''
வரிசை 58:
 
== வரலாறு ==
===12 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை===
பெர்லின் நகரத்தில் மக்கள் வசித்ததற்கான மிகப்பழைய ஆதாரங்களாக ஏறத்தாழ 1192ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான கூரை வளை ஒன்றும் 1174ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான வீட்டின் பாகங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய பெர்லின் பகுதியில் நகரங்கள் இருந்தமை குறித்த மிகப்பழைய குறிப்புகள் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.மேலும் பெர்லினின் மைய பகுதியில் அமைந்நுள்ள ஃபிஷெரின்சல்( Fischerinsel ),காலின்( Cölln ) எனும் இரண்டு பகுதிகளை பற்றி 1237ம் ஆன்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
 
===17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை===
முப்பதாண்டு போரின்(1618-1648) முடிவில் பெர்லின் பேரழிவிற்கு உள்ளானது.அதிலிருந்த மூன்றில் ஒரு பகுதி வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன்,மேலும் நகரம் அதன் மொத்த மக்கள் தொகையில் பாதியை இழந்தது.அதன் பின் பெருமளவு குடியேற்றகள் நடந்தது.
அதன்பின் 19 ஆம் நூற்றாண்டின் போது தொழிற்புரட்சியின் போது பெர்லின் மாற்றம் அடைந்தது இதனால் நகரின் பொருளாதாரம் மற்றும் மக்கள் அதிகரித்து, பெர்லின் ஜெர்மனியின் முக்கிய ரயில்,பொருளாதார மையமாக ஆனது.
===20 ஆம் நூற்றாண்டு===
முதல் உலகப்போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு கிரேட்டர் பெர்லின் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன்படி பெர்லினை சுற்றியுள்ள புறநகர் நகரங்கள், கிராமங்கள், மற்றும் தோட்டங்களில் இணைக்கப்பட்டு பெர்லின் விரிவாக்கப்பட்டது.இந்த விரிவாக்கத்திர்க்கு பிறகு, பெர்லின் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.
1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனபட்டது.பின்னர் 1990 ல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
== புவியியல் ==
ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் பெர்லின் அமைந்துள்ளது. இது போலந்துடனான ஜேர்மனியின் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் மேற்காக வட ஐரோப்பிய சமவெளியின் பகுதியான சமதரைப் பகுதியில் உள்ளது. பெர்லினின் மிக உயர்ந்த பிரதேசங்களாக நகரின் எல்லைப்புறமாக உள்ள ரோபல்ஸ்பேக் மற்றும் மக்கல்பேக் எனும் இடங்கள் காணப்படுகின்றன. இவை கடல்மட்டத்திலிருந்து 115 மீட்டர் உயரமானவை.
 
== காலநிலை ==
கோடைகாலம் சூடானதும் ஈரப்பதன் அதிகமுடையதுமாகக் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் சராசரி உயர் வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது.மேலும் குறைந்தபட்ற வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகும்.சராசரி மழைஅளவு 22 அங்குலமாக(568 மிமீ) உள்ளது. அவற்றில் ஐந்தில் நான்கு பங்கு பனிபொழிவாக விழுகிறது.
 
== அரசு ==
 
== பொருளாதாரம் ==
2009 ஆம் ஆண்டில், பெர்லின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7% வளர்ச்சி பெற்றது.(ஒட்டுமொத்த ஜெர்மனி -3,5%) மேலும் மொத்த உற்பத்தி € 90 பில்லியன் யூரோ ஆக இருந்தது ($117 பில்லியன்).பெர்லினின் பொருளாதாரத்தில் 80% சேவை துறை மூலம் வருகின்றது.அதன் வேலையின்மை விகிதம் செப்டம்பர் 2011 ல் ஒரு 15 ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவான 12.7% ஐ (ஜெர்மன் சராசரி: 6.6%)அடைந்து நிலையாக இருக்கிறது.
 
== போக்குவரத்து ==
 
== சகோதர நகரங்கள் ==
பெர்லின் 17 நகரங்களுடன் அதிகாரப்பூர்வ கூட்டுறவு வைத்துள்ளது. பெர்லின் முதன்முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் உடன் 1967 ஆம் ஆண்டு
 
சகோதர நகரங்களுக்கான உடன்படிக்கையிட்டது.அதன் பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டது.
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது