பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணம் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதையை கூறுகிறது. அதில் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்று கழுதை முக வடிவில் இருந்தாக கூறப்பட்டுள்ளது. அந்த தலையானது தேவர்கள் மற்றும் அரக்கர்கள் போரில் அரக்கர்களுக்கு உதவி செய்வதாக கூறியதைக் கண்டு தேவர்கள் திருமாலிடம் அத்தலையை நீக்க வேண்டினர். ஆனால் திருமாலோ, அத்தலையானது பூலோகத்திலோ அல்லது வேறொங்கு விழுந்தால் விபரீதம் நேரிடும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10856 பிரம்ம புராணம்</ref>
 
===[[முருகன்]]===
 
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மா [[கயிலை]] வரும்பொழுது, [[முருகன்|முருகனை]] வணங்க தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து யார் என வினவெழுப்பிய பொழுது, தான் [[பிரணவ மந்திரம்|பிரணவ மந்திரத்தினை]] கூறி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைசெய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிமிருந்து பிரம்மாவிற்கு படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தலவரலாறு கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது