ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 73:
ஈராக் இல் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்பபடும்.
 
==வரலாறு==
ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டத.மேலும் இது மெசபடோமியா பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது. 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது. ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்கு பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் 2011 ல் வெளியேறின.
* செம்புக்காலத்தில் டைக்ரிஸ் மற்றும் யுப்ரிடீஸ் நதி பள்ளத்தாக்கு சுமேரிய நாகரிகம் இருந்தா பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும்.இதுவே இராக்கின் தோற்றமாக கருதப்படுகிறது.
 
* கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காத் பேரரசு ஆட்சி செய்தது
* கி.மு. 2004 ல் எலமைட் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
* அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
* கி.மு.1365-1053 வரை மத்திய அசிரிய பேரரசின் கீழ் இருந்தது.மேலும் பாபிலோனிய பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹமுராபி முதலிய புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
* கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
* 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய பேரரசின் கீழ் இருந்தது.
* ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசபடோமியா பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.
* 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
* 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
* ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்கு பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.
* 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
==புவியியல்==
ஈராக் 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 437,072 சதுர கி.மீ (168,754 சதுர மைல்) ஆகும்.மேலும் இது உலகின் 58 வது பெரிய நாடாக உள்ளது. ஈராக்கில் அதிக அளவு பாலைவன பகுதிகளை கொண்டுள்ளது,எனினும் யுப்ரிடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் ஆண்டுதோறும் 60.000.000 கன மீட்டர் வளமான வண்டல் மண்ணை சமவெளி பகுதியில் கொண்டுவந்து சேர்க்கின்றது.நாட்டின் வடக்கு பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்து காணபடுகின்றது இந்நாட்டின் உயர்ந்த பகுதி பெயரிடப்படாத 3,611 மீ (11,847 அடி) உயர மலையாகும் எனினும் இது உள்ளூர் மக்களால் சீக்கா தர் (கருப்பு கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஈராக் பாரசீக வளைகுடா பகுதியில் 58 கி.மீ. (36 மைல்) நீள கடலோர பகுதியையும் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது