பேச்சு:சேர்வியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேரா வி.கே,பார்க்கவும்... Permutation பற்றி
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
எல்லோரும் கவனிக்க: ஒரு சொல்லாக்கத்தைப்பற்றி.
வரிசை 1:
பேரா வி.கே, Permutation என்பதற்கு திரிபு என்பது சரியாகப் படவில்லை. mutation என்பது மாறுவது,திரிபு என்பது distortion என்பது போல் பொருள் தரக்கூடியது. எனவே மாற்றடுக்கு அல்லது மாற்றமைப்பு எனலாமா?What are the permutation என்பதை, "மாற்றமைப்புகள் யாவை", "மாற்றடுக்குகள் எத்தனை" என்பன போல எழுத்லாம். திரிபு என்பது பொதுவாக ஒன்றி வேறொன்றாக மாறுவது. மாற்றி அடுக்கப்படுவதையும் திரிபு என்று கொள்ளலாம் எனினும், அடிப்படையில் திரிபு என்பது சற்று வேறான கருத்து என்று எண்ணுகிறேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 16:34, 17 ஜூலை 2007 (UTC)
 
:'வரிசைமாற்றம்' என்ற சொல் பள்ளிகளில் வழக்கத்திலிருப்பதாகத்தெரிகிறது.
:permute: வரிசைமாற்று; மாற்றடுக்கு (verb); திரி (verb); மாற்றமை;
:permutation: வரிசைமாற்றம்; மாற்றடுக்கல்; திரிபு; மாற்றமைப்பு
:permutable: வரிசைமாற்றக்கூடிய; மாற்றடுக்கக்கூடிய; திரிக்கக்கூடிய; மாற்றமைக்கக்கூடிய;
:permuted (adj) : வரிசைமாற்றப்பட்ட; மாற்றடுக்கப்பட்ட;திரிக்கப்பட்ட; மாற்றமைக்கப்பட்ட;
:இவைகளில் எந்த நான்கு சொற்களைக் கையாளலாம் என்பதற்கு, மற்ற பயனர்களும் அவர்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்தால் நல்லது.
:நான் திரிபு என்று பயன்படுத்தினதின் காரணம், 'சேர்வு' என்ற சொல்லுக்கு இணையாக இருப்பதே.
--[[பயனர்:Profvk|Profvk]] 19:48, 17 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சேர்வியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சேர்வியல் (கணிதம்)" page.