அரசறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
19ம் 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு நிலை சார்ந்த இக் கருத்துநிலைகள் கூடிய செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்ந்தன.
 
அரசியலானது அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமைகின்ற போதிலும் அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவையாகா. அவை ஒன்றிலிருந்து ஒன்று தம்மிடையே வேறுபட்டவை. அரசியல் என்பது அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியலோடு தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. அதாவது அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றை சார்ந்தவராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால் அரசியல் விஞ்ஞானி என்பவர் அரசுடன் தொடர்புடைய சரித்திரம், சட்டம், கோட்பாடு, நடைமுறை போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவார். அதே வேளை அரசியல் விஞ்ஞானிகளும் நேரடியாக அரசியலில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டலாம்.
*பண்டைய அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ சிசிலியின் சைசாகஸ் அரசர்களுக்கு சேவை செய்தவராவார்
*அரிஸ்ரோட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு சேவை செய்தவராவார்.
*மாக்கியவல்லி புளோரன்ஸ் குடியரசின் செயலாளராக பணிபுரிந்தவராவார்.
 
J.W. கார்ணர் (Garner) என்பவர் மிகச் சுருக்கமாக “அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும் முடிவும் அரசு” என்கிறார்.
அவ்வாறெனின் அரசு என்பது யாது எனின், ஒரு மனித குழு ஒரு சமூகமாக இயங்குவதற்கு தனது நடத்தைகளையும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கின்றது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அச் சமூகம் அரசு என வர்ணிக்கப்படலாம். அதில் நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்குரிய விதிகள் அல்லது கோட்பாடுகள் சட்டம் எனப்படலாம். அச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் எனலாம். எனவே அரசு என்பதை மிகச் சுருக்கமாக கூறின் - “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்” என்று குறிப்பிடலாம்.
அரசியல் சிந்தனையில் அரசின் தோற்றம் தொடர்பாக பல்வேறு சிந்தனைகள் காணப்படுகின்றன.
*கடவுட் கோட்பாடு
*பலவந்தக் கோட்பாடு
*சமூக ஒப்பந்தக் கோட்பாடு
*மாக்சியக் கோட்பாடு
*தந்தைவழிக் கோட்பாடு
*தாய்வழிக் கோட்பாடு
 
இவ்வாறான கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும். அதாவது அரசானது சமூகத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு இக் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பில் பல்வகை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hopes), ஜோன் லொக் (John Lock), ரூசோ (Ruso) போன்றோரே சமூக ஒப்பந்தவாதிகளில் சிறப்பானவர்களாகும்.
 
==அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.
 
[[பகுப்பு:அரசறிவியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அரசறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது