ஹனோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 81:
 
8ம் நூற்றாண்டின் பிற்பாதியில், மக்களின் கிளர்ச்சியை அடக்கும் வகையில், தாங் வம்ச ஆளுநரான துரோங் பா ஙி என்பவன், லா தாங்கை(லா கோட்டை,து லீயிலிருந்து இன்றைய பா திங் புறநகர்ப்பகுதியிலுள்ள கான் ஙுஆ வரை) உருவாக்கினான். 9ம் நூற்றாண்டின் முற்பாதியில், இது மேலும் மெருகூட்டப்பட்டு கிம் தாங் (கிம் கோட்டை) என அழைக்கப்பட்டது. 866ல், சீன ஆளுநரான காஓ பியென் ஆட்சியை நிறுவி இதனை தாய் லா கோட்டை (கான் ஙுஆவிலிருந்து பா தாஓ வரை) எனப் பெயர் மாற்றினான். இதுவே பண்டைய ஹனோயின் மிகப்பெரிய கோட்டையாகும்.<ref name="en.hanoi.vietnamplus.vn"/>
 
=== தாங் லோங், தொங் தோ, தொங் கான், தொங் கின் ===
 
1010ல், லி வம்சத்தின் முதல் ஆட்சியாளரான லி தாய் தோ தாய் வியட்டின் தலைநகரை தாய் லா கோட்டைக்கு மாற்றினான். செவ்வாற்றின் மேலாக டிராகன் ஒன்று பறந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டு இவன் இவ்விடத்தை '''தாங் லோங்''' ({{linktext|昇|龍}}, "மேலெழும் டிராகன்") எனப் பெயரிட்டான். இப் பெயர் தற்போதும் கவிதைகளில் குறிப்பிடப்படுகிறது.1397 வரை தாய் வியட்டின் தலைநகராக தாங் லோங் விளங்கியது. பின்னர் தலைநகர் தாங் ஹோவுக்கு மாற்றப்பட்டு தாய் தோ ({{linktext|西|都}}), அதாவது "மேற்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது. தாங் லோங் பின்னர் '''தொங் தோ''' ({{linktext|東|都}}), அதாவது "கிழக்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது.
 
1408ல், சீனாவின் மிங் வம்சம் வியட்நாமைத் தாக்கிக் கைப்பற்றியதுடன், தொங் தோவின் பெயரை வியட்நாமிய மொழியில் '''தொங் கான்''' ({{zh|c={{linktext|東|關}}}}, ''Dōngguān'') அதாவது, "கிழக்கு வாயில்" எனப் பெயர் மாற்றம் செய்தது. 1428ல், லீ லோயின் தலைமையில் ஒன்றிணைந்த வியட்நாமியர் சீனர்களைத் தோற்கடித்தனர். லீ லோய் பின்னர் லீ வம்சத்தைத் தோற்றுவித்ததோடு, தொங் கானை '''தொங் கின்''' ({{linktext|東|京}}, "கிழக்குத் தலைநகர்") அல்லது டொங்கின் எனப் பெயரிட்டான். தாய் சோன் வம்சத்தின் முடிவைத் தொடர்ந்து இது '''பாக் தான்''' ({{linktext|北|城}}, "வடக்குக் கோட்டை") எனப் பெயரிடப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹனோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது