மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
== வரலாறு ==
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. [[சுமேரியர்]]கள், [[எகிப்தியர்]]கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று [[மத்திய கிழக்கு நாடுகள்|நடுகிழக்கு நாடுகளில்]] வாந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.
 
==வகைகள்==
 
மெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, '''கிழக்கத்திய மெய்யியல்''' மற்றும் '''மேற்கத்திய மெய்யியல்''' என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது.
 
===கிழக்கத்திய மெய்யியல்===
 
'''கிழக்கத்திய மெய்யியல்''' (''Eastern philosophy'') என்பது [[ஆசியா]] கண்டத்தில் தோன்றி வளர்ந்த [[சீன மெய்யியல்]], ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், [[இந்திய மெய்யியல்]], கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய மெய்யியலையும்]] உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
 
கிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.
 
===மேற்கத்திய மெய்யியல்===
 
'''மேற்குலக மெய்யியல்''' என்பது [[மேற்குலகம்|மேற்குலகத்தின்]] [[மெய்யியல்]] சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை [[இந்திய மெய்யியல்|இந்திய]], [[சீன மெய்யியல்|சீன]], முதற்குடிமக்கள், [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய]] மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு [[சட்டம்|சட்ட]], [[அரசியல்]], சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான [[கிரேக்க மெய்யியல்|கிரேக்க மெய்யியலுடன்]] தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.
 
== உள் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது