குடியரசு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 16:
'''''குடியரசு''''' (''The Republic'', ''Politeia'') என்ற நூல் [[சாக்கிரட்டீசு|சாக்கிரட்டீசு உரையாடல்]] நடையில் ஏறத்தாழ கி.மு 380களில் [[பிளேட்டோ]]வால் எழுதப்பட்டதாகும். இது நீதியை வரையறுப்பதுடன் நீதிமிகு மாந்தர், [[நகர அரசு|நகரம்-அரசுகளின்]] தன்மையையும் ஒழுங்கையும் விவரிக்கிறது. <ref>Brickhouse, Thomas and Smith, Nicholas D. [http://www.iep.utm.edu/p/plato.htm Plato (c.427-347 BC)], The Internet Encyclopedia of Philosophy, University of Tennessee, cf. ''Dating Plato's Dialogues''.</ref> இது பிளேட்டோவின் மிகவும் அறியப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. [[மெய்யியல்]] மற்றும் [[அரசியல் தத்துவம்]] துறைகளில் அறிவுசார்ந்தும் வரலாற்றிலும் மிகவும் தாக்கமேற்படுத்திய நூலாகவும் கருதப்படுகிறது.<ref>National Public Radio (ஆகத்து 8, 2007). [http://www.npr.org/templates/story/story.php?storyId=12594668 Plato's 'Republic' Still Influential, Author Says]. Talk of the Nation.</ref><ref>[http://www.allphilosophers.com/ Plato: The Republic]. Plato - His Philosophy and his life, allphilosophers.com</ref> இந்த நூலில், [[சாக்கிரட்டீசு]]ம் பிற ஏதென்சு நகரத்தினரும் வெளிநாட்டவரும் நீதியின் பொருள் குறித்து உரையாடுகின்றனர். நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட மகிழ்ச்சியாக உள்ளானா என்பதை ஆராய்கின்றனர். அக்கால பல்வேறு ஆட்சிகளைக் குறித்தும் ஒப்பிட்டு உரையாடுகின்றனர். பங்கேற்போர் [[உயிர் (சமயம்)|உயிரின்]] வெவ்வேறு வடிவங்கள் குறித்தும் அழியாமை குறித்தும் உரையாடுகின்றனர். [[சமூகம்|சமூகத்தில்]] மெய்யியலாளர்கள் மற்றும் [[கவிதை|கவிஞர்களின்]] பங்கு பற்றியும் உரையாடுகின்றனர்.<ref>{{cite book | last = Baird | first = Forrest E. | authorlink = | coauthors = Walter Kaufmann | title = From Plato to Derrida | publisher = Pearson Prentice Hall | year = 2008 | location = Upper Saddle River, New Jersey | isbn = 0-13-158591-6 }}</ref>
 
== பிளேட்டோவின் வாதங்கள் (எளிமையாக) ==
பிளேட்டோ [[ஆள்|தனிநபர்களும்]] [[சமூகம்|சமூகங்களும்]] ஒரே தன்மை உடையனவாகக் கருதினார்.
 
மக்கள் மூன்று வகையானவற்றால் இயக்கப்படுவதாக உணர்ந்தார்:
* ஒன்றைக் குறித்து ஆய்வதற்கும் சிந்திப்பதற்குமான [[மனம்]]
* மனித உடலை மேற்பார்வை காணும் [[சுயம்]] அல்லது [[ஆவி]]
* வேலை செய்ய, விரும்ப, வெறுக்க, ( [[உணவு]], குடி பானம் [[பால் (உயிரியல்)|பாலியல் ஈர்ப்பு]] போன்றவற்றை) வேட்க [[உடல்]]
ஓர் நல்ல மனிதன் இவை எல்லாவற்றாலும் இயக்கப்பட்டாலும் இறுதியில் அவனது மனமே மற்ற இரண்டு தேவைகளையும் கட்டுப்படுத்தும்.
 
இந்த மூன்று கூறுகளின் தேவைகளையும் நிறைவேற்றாதவனும் அல்லது மற்ற இரு கூறுகளை மனதால் கட்டுப்படுத்தவியலாதவனும் மகிழ்ச்சியின்றி வாழ்வான். மனதால் கட்டுப்படுத்தவியலாது மனநிலை பிறழவும் கூடும். அல்லது பின்னால் தாங்கள் வருந்தக்கூடியக் காரியங்களைச் செய்வர். அவர்களை மற்றவர்களும் வெறுப்பதால் மேலும் துன்பத்திற்கு ஆளாவார்கள். அவர்கள் ஓர் ஆட்சியமைப்பு இல்லாத
[[நாடு|நாட்டிற்கு]] ஒப்பாவார்கள்.
 
பிளேட்டோ சமூகமும் இதைப் போன்றே மூன்று வகையான மக்களால் இயக்கப்படுவதாக கருதினார்.
* சமூக நலனுற்காக சிந்திக்கும் [[மெய்யியல்|மெய்யியலாளர்கள்]]
* அச்சமூக அமைப்பைக் காக்கும் [[படைத்துறை|படை வீரர்கள்]]
* அச்சமூகத்தின் [[பணி|பணியாளர்கள்]]
சமூகத்திற்கு இந்த மூன்று வகையான மக்களும் தேவை; மெய்யியலாளர்கள் மட்டுமே நல்ல மனிதர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் தங்கள் சுயத்தாலும் உடலாலுமே கட்டுப்படுத்தப்படுவர்; மனதால் அல்ல.
படைவீரர்கள் தங்கள் மனம் கூறுவதைக் கேட்க மாட்டார்கள்; பணியாளர்கள் மனம் மற்றும் சுயம் கூறுவதையும் கேட்க மாட்டார்கள்.
இதனால் மெய்யியலாளர்களே அரசாட்சி செய்ய வேண்டும்.மற்றவர்கள் படைவீரர்களாகவும் பணியாளர்களாகவுமே இருக்க வேண்டும்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது