மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
== வரலாறு ==
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. [[சுமேரியர்]]கள், [[எகிப்தியர்]]கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று [[மத்திய கிழக்கு நாடுகள்|நடுகிழக்கு நாடுகளில்]] வாந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.
 
===பண்டைய சீனர்கள்===
 
{{main|சீன மெய்யியல்}}
 
'''சீன மெய்யியல்''' சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட [[மெய்யியல்]] சிந்தனைகளைக் குறிக்கின்றது.
3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.
 
==வகைகள்==
வரி 27 ⟶ 34:
 
===கிழக்கத்திய மெய்யியல்===
 
{{main|கிழக்கத்திய மெய்யியல்}}
 
'''கிழக்கத்திய மெய்யியல்''' (''Eastern philosophy'') என்பது [[ஆசியா]] கண்டத்தில் தோன்றி வளர்ந்த [[சீன மெய்யியல்]], ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், [[இந்திய மெய்யியல்]], கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய மெய்யியலையும்]] உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
 
வரி 33 ⟶ 42:
 
===மேற்கத்திய மெய்யியல்===
 
{{main|மேற்குலக மெய்யியல்}}
 
'''மேற்குலக மெய்யியல்''' என்பது [[மேற்குலகம்|மேற்குலகத்தின்]] [[மெய்யியல்]] சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை [[இந்திய மெய்யியல்|இந்திய]], [[சீன மெய்யியல்|சீன]], முதற்குடிமக்கள், [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய]] மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு [[சட்டம்|சட்ட]], [[அரசியல்]], சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான [[கிரேக்க மெய்யியல்|கிரேக்க மெய்யியலுடன்]] தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது