அரிமத்தியா யோசேப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,068 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
|issues=
}}
'''அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனித யோசேப்பு''' என்பவர் நற்பெய்திகளின் படி [[இயேசுவின் சாவு]]வுக்குப்பின்பு அவரை [[இயேசுவை அடக்கம் செய்தல்|அடக்கம் செய்தவர்]] ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும் [[இறையரசு|இறையாட்சியின்]] வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது. மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது. யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது. இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதிசெய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.
 
நிக்கதேமின் துணையோடு [[கொல்கொதா]]வில் இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.
 
[[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[லூதரனியம்]] மற்றும் சில [[ஆங்கிலிக்கம்]] சபைகள் இவரை [[புனிதர்]] என ஏற்கின்றன.
 
==மேலும் காண்க==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1571218" இருந்து மீள்விக்கப்பட்டது