அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
[[File:Gratz.rectifier.en.svg|thumb|left|600px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
<br>ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது