ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிழை திருத்தம்
சி பிழை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Thanthai_Periyar.jpg|thumb|right|தந்தை பெரியார்]]
 
'''ஈ. வெ. ராமசாமி''' (E. V. Ramasamy, [[செப்டம்பர் 17]], [[1879]] - [[டிசம்பர் 24]], [[1973]]) என்ற இயற்பெயர் கொண்ட இவர், '''ஈ.வெ.ரா''', '''ஈ.வெ.ராமசாமி நாயக்கர்''', '''பெரியார்''' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினைத்]] தோற்றுவித்தவர். இவருடைய [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]], [[பகுத்தறிவுவாதம்|பகுத்தறிவுவாதமும்]] மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட [[நாயக்கர்]] என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, [[தீண்டாமை]], [[மூடநம்பிக்கை]], வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் [[பார்ப்பனியம்]], பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.
 
இவருடைய விழுமியங்களும், கொள்கைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், [[நாத்திகம்]]) , அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது