வாருங்கள்!

வாருங்கள், Nmadhubala, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 14:33, 9 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி

தொகு

பயனுள்ள உங்கள் தொகுப்புகளுக்கு, உரையாடல்களுக்கு நன்றி, மதுபாலா. தொடர்ந்து பங்களியுங்கள்.--Ravidreams 14:28, 18 பெப்ரவரி 2007 (UTC)

தொடர்ந்து பங்களியுங்கள். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து பங்களிப்பது விக்கிப்பீடியாவை சிறப்பாக வளர்த்தெடுக்க உதவும். உங்களைப் பற்றிச் சில தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். நன்றி. --கோபி 15:39, 18 பெப்ரவரி 2007 (UTC)

in firefox, tamilkey is the only way. if u have own comp, then install e-kalappai. e-kalappai and tamilkey are same in functionality and made by same group of people. for more tamil typing help see wikipedia:FAQ. please learn and use tamil 99 keyboard layout. its the best, easiest and fastest way to type tamil. see my blog post reagrding tamil 99. also see தமிழ் 99--Ravidreams 21:47, 1 மார்ச் 2007 (UTC)

பாராட்டுகள்

தொகு

ஆர்வமுடன் நீங்கள் செய்யும் திருத்தங்களும், இப்பொழுது ஆக்கியிருக்கும் மாதவி கட்டுரையும் ஊக்கம் தருவதாக உள்ளது. தொடர்ந்து இயன்றளவு பங்களிக்க வேண்டுகிறேன்.--செல்வா 15:23, 3 மார்ச் 2007 (UTC)

உங்களைப் பற்றிய விபரங்களை உங்களது பயனர் பக்கத்தில் தாருங்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --கோபி 15:44, 3 மார்ச் 2007 (UTC)

நன்றி

தொகு

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, மது. நான் இப்பொழுது தான் மூன்றாவது ஆண்டைத் தொடங்குகிறேன். மயூரனாதன் அவர்கள் நான்காவது ஆண்டாகத் தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறார். இன்னும் இது போல் பலர் இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உங்களைப் போன்றவர்களின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. --ரவி 14:29, 17 மார்ச் 2007 (UTC)

ஈரோடு மாவட்டம்

தொகு

ஈரோடு மாவட்டம் கட்டுரையில் உங்கள் மாற்றங்கள் மிக நன்று. மிக்க நன்றி மதுபாலா.--Sivakumar \பேச்சு 17:42, 17 மார்ச் 2007 (UTC)

category->பகுப்பு போன்ற சிறு தொகுப்புகள் அவசரம் இல்லை என்று தோன்றுகிறது. எனினும் awb கொண்டு நீங்கள் தொடர்ந்து தொகுப்புகளை செய்யும் பட்சத்தில் அதற்கு ஒரு bot கணக்கு உருவாக்குவது நன்று. கணக்கு உருவாக்கினால் bot status தந்து விடலாம். நன்றி--ரவி 19:30, 17 மார்ச் 2007 (UTC)

இப்ப தமிழ் விக்கியில் ஒரு சிலரே துப்புரவுப் பணியில் இருக்கோம். உங்களைப் போல ஆங்கில விக்கி அனுபவமுள்ளவர்கள் இதில ஈடுபட விரும்பினால் மகிழ்ச்சியே. தொடர்ந்து awb பயன்படுத்த எண்ணமிருந்தா சொல்லுங்க. உங்க awb பயனர் கணக்குக்கு bot status தந்துடலாம். ஏற்கனவே, 3, 4 awb bot கணக்குகளை தமிழ் விக்கியில் சிலர் வைச்சிருக்கோம். ஈரோடு, திருச்சி கட்டுரைகளில் உங்க மாற்றங்கள் நன்று. சத்தியமங்கலம் வரைக்கும் வந்தாச்சு..வீரப்பன் குறித்து ஒரு கட்டுரை உருவாக்கித் தர முடியுமா? !!!--ரவி 09:42, 18 மார்ச் 2007 (UTC)

மாவட்டக் கட்டுரைகள் முக்கியமே. வீரப்பன் கட்டுரை காத்திருக்கலாம் :)--ரவி 18:12, 20 மார்ச் 2007 (UTC)

பாராட்டு

தொகு

மது, நீங்கள் த.வி-க்கு அளித்துவரும் திருத்தங்களும் ஆக்கங்களும், த.வி-யின் தரத்தை உயர்த்தும் என நம்புகிறேன். உங்கள் பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். அருள்கூர்ந்து, இயன்ற பொழுதெல்லாம் பங்களிக்க வேண்டுகிறேன். --செல்வா 23:14, 17 மார்ச் 2007 (UTC)

நீங்கள் தொடர்ந்து பங்களிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களைப் போன்றோரின் வருகை மிகுந்த உற்சாகமளிக்கிறது. பணி தொடர வேண்டுகிறேன். நன்றி. --கோபி 18:27, 20 மார்ச் 2007 (UTC)
ஊக்கத்துக்கு மிக்க நன்றி, கோபி. :) உங்களைப் போல ஓராண்டில் 901 கட்டுரைகள் எழுத முடியாமற் போனாலும், என்னால் முடிந்த வரையில் எழுதுகிறேன். --மது 16:06, 21 மார்ச் 2007 (UTC)

எங்கும் தமிழ் :)

தொகு

மது, ஓய்வெடுத்துட்டே எழுதுங்க. ஒரு தகவலுக்கு :) - உரையாடல் பக்கங்களிலும் தமிழிலேயே எழுதுவது என்று அண்மைக் காலமாக தமிழ் விக்கியில் ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. --ரவி 18:18, 20 மார்ச் 2007 (UTC)

இல்லீங்க..தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..2003 தொடக்கம் 2006 பாதி வரை பலரும் பேச்சுப் பக்கங்களில் ஆங்கிலத்திலும் எழுதி வந்தோம். அப்புறம், பல காரணங்களுக்காக -முக்கியமாக ஆங்கிலம் தெரியாத தமிழ்நாட்டு, ஈழத் தமிழர், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வளரும் ஆங்கிலம் அறிய வாய்ப்பு இல்லா தமிழ்க் குழந்தைகள் தமிழ் விக்கியிடம் இருந்து அன்னியப்பட்டுடக்கூடாது என்பதற்காக - பேச்சுப் பக்கங்களில் அனைவரும் தமிழிலேயே எழுதுவது என்று ஒரு புரிந்துணர்வு வந்தது. இது புரிந்துணர்வு தான். விதி இல்லை. மத்தபடி, தமிழ்ப்பித்தன் ??!! ஹ்ம் :)--ரவி 15:17, 21 மார்ச் 2007 (UTC)

பயனரின் பேச்சுப் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதுவதை யாரும் பொருட்படுத்துறதில்லை. அது ok :) அவசரம் கருதியும் கட்டுரைப் பேச்சுப் பக்கங்கள்ல ஆங்கிலத்துல சில சமயம் எழுத வேண்டி வரலாம். ஆனா, இப்படி ஒரு வழக்கம் இருக்குன்னு தெரியப்படுத்த நினைச்சேன். --ரவி 15:20, 21 மார்ச் 2007 (UTC)

மது, if u r learning tamil typing just now, please learn the tamil99 keyboard layout for tamil. see the article தமிழ் 99 and the external links in it. it is the best layout to type tamil fast, easy, intelligently and with less energy!!--ரவி 20:02, 21 மார்ச் 2007 (UTC)

எனக்கு முரசு அஞ்சல் (ஆதமி) விசைப்பலகைதான் எளிதாக இருக்கின்றது. எதுவுமே, பழகினால் எளிதாகிவிடும். எது பிடித்து இருக்கின்றதோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மிக விரைவில் கைக்கு பழகிவிடும்.--செல்வா 21:12, 21 மார்ச் 2007 (UTC)

செல்வா, பழகினால் எதிலும் வேகமாகத் தட்டச்சலாம் என்பது உண்மை தான். ஆனால், தமிழ் 99 பழகவும் எளிது. அயர்ச்சியும் அளிக்காது. தயவுசெய்து இது குறித்த என் வலைப்பதிவுக் கட்டுரையைப் படித்துக் கருத்துப் பகிர வேண்டுகிறேன். ஏற்கனவே பாமினி போன்ற முறையைப் பயின்றவர்கள் தமிழ் 99க்கு மாறுவது சற்று சிரமம். ஆனால், ammaa = அம்மா என்று தமிங்கில விசைப்பலகையில் எழுதுபவர்கள் மிக எளிதாக தமிழ் 99க்கு மாற முடியும். --ரவி 22:10, 21 மார்ச் 2007 (UTC)

கொடுமை இல்லீங்க, புதுமை, எளிமை, அருமை..:) சரி உங்களை விட்டுடுறேன். பிழைச்சுப் போங்க ;) ஆனா, திரும்பவும் சொல்றேன்..ammaa = அம்மா-னு தட்டச்சு செய்யுறது is the most tiring thing when u write a lot in tamil. என்னைக்காவது ஓய்வா இருந்தா தமிழ்99 கொஞ்சம் முயற்சி செய்யுங்க. இரண்டு மணி நேரத்துல இதோட அமைப்பு மனசுல பதிஞ்சிடும். அப்புறம் கொஞ்சம் பயிற்சி செஞ்சா ஒரு வாரத்துல செம வேகம் வந்துடும். அப்புறம் தான் இதோட அருமை தெரியும்..ஹ்ம்..நானும் பலருக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கேன்..., ஆனா :( !!!--ரவி 18:45, 23 மார்ச் 2007 (UTC)

நீங்கள் தமிழ்99 பயன்படுத்த முன்வந்ததில் மகிழ்ச்சி :) shift+q =ஸ , shift+w =ஷ , shift+e =ஜ , shift+r =ஹ shift+t = க்ஷ, shift+y =ஸ்ரீ . முழுமையான layoutக்குப் பார்க்கவும் - http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif --ரவி 09:11, 9 ஏப்ரல் 2007 (UTC)

பாராட்டுகள்

தொகு

மது, நீங்கள் ஆர்வமுடன் கட்டுரைகளை மெய் பார்த்து, திருத்தி செப்பமிடுவது கண்டு மகிழ்ந்து நன்றி தெரிவிக்கின்றேன். தங்களைப் போல இன்னும் 5-6 ஆர்வலர்கள் வந்தால் எவ்வளவு விரைவாக வளர்வோம்! தொடர்ந்து இயன்றளவு பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 12:29, 31 மார்ச் 2007 (UTC)

ஒலிப்பெயர்ப்பு

தொகு

மது, ஒலி்பெயர்ப்பு-எழுத்துபெயர்ப்பு குறித்த ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. குறிப்பாக, இலங்கை-தமிழ்நாடு ட், ர், ற் வேறுபாடு !! :( இன்னும் அதிகப் பயனர்கள் வந்த பிறகே ஒரு பொருத்தமான முடிவை எடுக்க இயலும். தற்போதைக்கு, பங்களிப்பாளர்களிடம் ஒரு புரிந்துணர்வு தான் இருக்கிறது. ஆங்கிலச் சொற்களைப் பொருத்தமான இடங்களில் தமிழாக்குவது ஒரு தீர்வு. எடுத்துக்காட்டுக்கு, ரெஸ்ற் கிரிக்கெற் - டெஸ்ட் கிரிக்கெட் குழப்பத்தை தேர்வுத் துடுப்பாட்டம் என்று தமிழாக்குவதன் மூலம் தீர்க்கலாம். நீல் ஆம்ஸ்ட்ராங் போன்ற ஆட்கள் பெயரை எழுதுவதில் தான் குழப்பம். இப்போதைக்கு முதலில் கட்டுரை எழுதுபவரின் எழுத்துக்கூட்டலை மதிக்க முற்படுகிறோம். மெனக்கெட்டு பல கட்டுரைகளைத் தமிழ்நாட்டு வழக்குக்கோ இலங்கை வழக்குக்கோ மாற்றுவதோ முதன்மைப்படுத்துவதோ விரும்பப்படுவதில்லை. மாற்று வழக்குகளை அடைப்புக்குறிக்குள் தந்து வருகிறோம். சுற்றி வளைக்கும் அணுகுமுறை. ஆனால், பன்னாட்டுப் பங்களிப்பாளர் நல்லுறவைப் பேண அவசியமாகிறது.

அப்புறம், இதற்கும் இனிமேல் செய்யப்போகும் உதவிகளுக்கும் ;) நன்றி தெரிவிக்க அவசியமில்லை. அந்த நேரத்தையும் சேர்த்து பிற கட்டுரைகளுக்குப் பங்களித்தீர்கள் என்றால் மகிழ்ச்சி. பிற வழமையான பயனர்களும் நன்றிகளை எதிர்ப்பார்ப்பதில்லை.--ரவி 23:15, 2 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

சிறு சந்தேகம்

தொகு

மது, நீங்கள் மாற்றச் சுருக்கங்களில் பிழைத் திருத்தம் என்று பயன்படுத்துகிறீர்கள். இது சரியானதா? பிழையைத் திருத்துதல் பிழை திருத்தம் தானே? பிழையைத் திருத்துதல் பிழை+திருத்தம் என்று வராது என்றே நினைக்கிறேன். பிழைத் திருத்தம் என்றால் பிழையான திருத்தம் (பிழை+திருத்தம்) என்றாகி விடாதா? நீங்கள் தொடர்ந்து பங்களிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி. --கோபி 17:31, 10 ஏப்ரல் 2007 (UTC)

த் வராதுன்னு தான் நினைக்கிறேன்--ரவி 17:34, 10 ஏப்ரல் 2007 (UTC)

கோபி, நீங்கள் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. இனி, 'பிழை திருத்தம்' என்றே எழுதுகிறேன். நன்றி. --மது 07:06, 11 ஏப்ரல் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு

தொகு

வாருங்கள் மதுபாலா! உங்கள் பங்களிப்பை மீண்டும் தமிழ் விக்கியில் கண்டு மகிழ்கிறேன். இயன்றபொழுது தமிழ் விக்கிக்குப் பங்களித்து உதவுங்கள்! நன்றி. --செல்வா 18:52, 10 ஜூன் 2008 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:15, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Nmadhubala,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா திட்டம்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nmadhubala&oldid=1109838" இலிருந்து மீள்விக்கப்பட்டது