வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''வானியல்''' (''Astronomy'') என்பது பூமிக்கும், அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை [[அவதானிப்பு|அவதானிப்பதிலும்]], விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியல் பெரும்பாலும், [[வானியற்பியல்|வானியற்பியலுடன்]] தொடர்புபட்டது.
 
[[அமெச்சூர் வானியல்|அமெச்சூர்கள்]] இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று. விசேடமாக மாறுகின்ற [[தோற்றப்பாடுகளை]]க் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும். இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|page=1|chapter=Introduction}}</ref>
 
{{அறிவியல்}}
 
== வரலாறு ==
முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. சில இடங்களில் பண்டைய பண்பாட்டினர், பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. "[[ஸ்டோன்ஹெஞ்ச்]]" இத்தகைய அமைப்புக்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய அமைப்புக்களின் சடங்கு ரீதியான பயன்பாடுகளுக்குப் புறம்பாகப் பருவ காலங்களை அறிந்து கொள்ளவும், கால அளவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்பட்டிருக்கக்கூடும். தொலைநோக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் வானியல் ஆய்வுகளை மேற்கொள்வோர், உயர்ந்த கட்டிடங்களில் அல்லது வேறு உயர்ந்த இடங்களில் நின்று வெறும் கண்களாலேயே உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிப்பர்.<ref name="history">Forbes, 1909</ref>
 
நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும், வானியல் நோக்ககங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன், அண்டத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. பெரும்பாலும் பழைய வானியல், கோள்களினதும், விண்மீன்களினதும் நிலைகளைப் படங்களில் குறிப்பதையே உள்ளடக்கியிருந்தது. இது தற்காலத்தில் [[வானளவையியல்]] (astrometry) என்பதனுள் அடங்குகிறது. இவ்வாறான நோக்குகள் மூலம் கோள்களின் இயக்கங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாக்கப்பட்டதுடன், அண்டத்திலுள்ள, [[சூரியன்]], [[சந்திரன்]], [[புவி]], பிற கோள்கள் ஆகியவற்றின் இயல்புகள் பற்றி மெய்யியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. புவி நடுவில் இருக்க, சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் என்பன புவியைச் சுற்றிவருவதாக அக்காலத்தில் நம்பப்பட்டது. இது அண்டத்தின் [[புவிமைய மாதிரி]] எனப்படும்.
வரிசை 88:
 
== உசாத்துணைகள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது