தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 [[சதுர கிலோமீட்டர்|ச.கிமீ]] (573 [[சதுர மைல்|ச.மைல்]]) பரப்பளவு கொண்டது. இதில் 783 [[சதுர கிலோமீட்டர்|ச.கிமீ]] (302 [[சதுர மைல்|ச.மைல்]]) பரப்பளவு கொண்ட பகுதி [[நாட்டுப்புறம்|நாட்டுப்புறப்]] பகுதியாகவும், 700 [[சதுர கிலோமீட்டர்|ச.கிமீ]] (270 [[சதுர மைல்|ச.மைல்]]) பகுதி [[நகர்ப்புறம்|நகர்ப்புறப்]] பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 [[கிமீ]] (32 [[மைல்]]), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று [[உள்ளாட்சி அமைப்பு]]க்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும்.
 
தில்லி வட இந்தியாவில் {{coord|28.61|N|77.23|E|}} அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தையும்]]; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் [[அரியானா]]வையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக [[சிந்து-கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]]யில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் [[யமுனை வெள்ளச் சமவெளி]]யும், [[தில்லி முகடு]]ம் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த [[மண்|வண்டல் மண்மண்ணை]]ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலைத்தொடரில்]] இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான [[சாஹ்தாரா]] ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்கள்]] ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு.
 
தில்லி [[கண்டத் தட்பவெப்பநிலை]] கொண்டது. [[கோடைகாலம்|கோடை]], [[மாரிகாலம்|மாரி]] காலங்களுக்கிடையே அதிக [[வெப்பநிலை]] வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே [[பருவப்பெயர்ச்சிக்பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவப்பெயர்ச்சிக் காற்றுக்]]க் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான [[மூடுபனி]]யும் காணப்படும். வெப்பநிலை −0.6 [[செல்சியஸ்|°ச]] (30.9 [[பாரன்ஹீட்|°ப]]) தொடக்கம் 47 [[செல்சியஸ்|°ச]] (117 [[பாரன்ஹீட்|°ப]]) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 [[செல்சியஸ்|°ச]] (77 [[பாரன்ஹீட்|°ப]]) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 [[செல்சியஸ்|°ச]] - 32 [[செல்சியஸ்|°ச]] (56 [[பாரன்ஹீட்|°ப]] - 90 [[பாரன்ஹீட்|°ப]]) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி [[மழைவீழ்ச்சி]] 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது.
 
<!--Infobox begins-->
"https://ta.wikipedia.org/wiki/தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது