பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:All Gizah Pyramids.jpg|thumb|250px|பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.]]
'''பண்டைய எகிப்து''' [[வடக்கு ஆப்பிரிக்கா]]வின் கிழக்குப் பகுதியில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால [[நாகரிகம்]] ஆகும். இது இன்றைய [[எகிப்து]] நாட்டுள் அடங்குகிறது. இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் [[பாரோ]]வின் கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம். இது மூன்று ஆயிரவாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது. [[புதிய அரசு]] எனப்பட்ட இறுதி அரசின் முடிவுடன் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க [[ரோமப் பேரரசு]] எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு [[மாகாணம்]] ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
 
== அரசும் பொருளாதாரமும் ==
வரிசை 7:
 
===பாரோக்கள்===
பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்கள் '''[[பாரோ]]''' (Pharaoh) என்று அழைக்கப்பட்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே [[எகிப்து|எகிப்தில்]] பாரிய [[பிரமிட்டு|பிரமிட்டுக்களும்]] நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க [[ரோமப் பேரரசு]] எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு [[மாகாணம்]] ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாரோக்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் படகில் [[நைல்]] நதியூடாக [[பிரமிட்டு|பிரமிட்டுக்களுக்கு]] கொண்டு செல்லப்படும், இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை ''இறுதிப் பிரயாணம்'' என அழைப்பர்.
 
== பண்பாடும் தொழில்நுட்பமும் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது