பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 99:
 
பல்வேறு உணவு மற்றும் குடிபான உற்பத்திகள் பக்டீரியாக்களின் செயற்பாட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலுற்பத்திப் பொருட்களான [[தயிர்]], யோகர்ட், [[பாற்கட்டி]], சீஸ் போன்றவை பாக்டீரியாக்களின் [[நொதித்தல்]] செயற்பாடு மூலமே சாத்தியமாகின்றன. [[வினாகிரி]] உற்பத்தியில் ''Acetobactor'' பாக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது.
சில பாக்டீரியாக்களால் ஐதரோகார்பன்களையும் பிரிகையடையச் செய்ய முடியும். எனவே சமுத்திரங்களில் கப்பல்கள் மூழ்குவதால் ஏற்படும் மசகெண்ணைக் கசிவை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பாக்டீரியாக்களை பூச்சிகொல்லிகளாகவும் பயன்படுத்த முடியும். இரசாயன் பூச்சிகொல்லிகளால் சூழற்சமநிலை பாதிக்கப்படும் ஆனால் அவற்றிற்குப் பதிலீடாக பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினால் உயர் விளைச்சல் கிடைப்பதுடன் சூழற்சமநிலையும் பேணப்படுதல் பக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். ''Bacillus thuringiensis'' எனும் மண்ணிலுள்ள பாக்டீரியாவே பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி பாக்டீரியாவாகும்.
 
===தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா===
கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.<ref>{{cite journal |author= |year= |title=Gold biomineralization by a metallophore from a gold-associated microbe |journal=Nature Chemical Biology |volume=9 |issue=2013 |pages=241–243 |publisher= |doi=10.1038 |pmid= |pmc= |url=http://www.nature.com/news/gold-digging-bacterium-makes-precious-particles-1.12352 |accessdate=18 June 2013 }}</ref> மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர்.<ref>{{cite web |url=http://msutoday.msu.edu/news/2012/gold-loving-bacteria-show-superman-strength/ |title=Gold-loving bacteria
வரி 118 ⟶ 119:
[http://www.sciencedaily.com/releases/2012/10/121002150031.htm Superman-Strength Bacteria Produce 24-Karat Gold]
</ref>
 
==பக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்==
 
[[File:Bacterial infections and involved species.png|thumb|center|380px|மனிதர்களில் நோயேற்படுத்தும் சில பாக்டீரிய இனங்கள்.]]
பாக்டீரியாக்கள் மனிதர்களின் பிரதான நோய்க்காரணிகளாகும். எனினும் இதுவரை அறியப்பட்ட பக்டீரிய இனங்களில் அனேகமானவை நோயைத் தோற்றுவிப்பதில்லை. பல பக்டீரிய இனங்கள் மனிதர்களின் குடலிலும், தோலிலும் ஒரு விதத் தீங்கும் புரியாமல்/ ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. [[ஏற்பு வலி]], [[நெருப்புக் காய்ச்சல்]], [[டிப்தீரியா]], [[குடற் காய்ச்சல்]], [[கொலரா]], [[தொழு நோய்]], [[சிபிலிஸ்]], [[காச நோய்]], [[உணவு நஞ்சாதல்]] போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் நோய்கள் பாக்டீரியாக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்கு வேளான்மை மற்றும் விவசாயத்திலும் பக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் பாரிய சேதத்தையும் நட்டத்தையும் தோற்றுவிக்கின்றன. இவற்றினால் ஏற்படும் சேதத்தை/ நோய்களைத் தடுப்பதற்கு [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன. இதனாலேயே தகுந்த மருந்துகள் காணப்பட்டாலும் பாக்டீரிய நோய்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. நோயேற்படுத்தும் பாக்டீரியாக்கள் நேரடியாக இழையங்களை உணவுக்காகத் தாக்குவதாலும், உணவுக்காகப் போட்டியிடுவதாலும், நஞ்சைச் சுரப்பதாலும் நோயைத் தோற்றுவிக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது