எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}{{Infobox Antipope
| honorific-prefix =
| name = ஐந்தாம் அலெக்சாண்டர்
வரிசை 38:
[[பிரான்சிஸ்கன் சபை]]யில் இணைந்த இவர் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]] மற்றும் [[பாரிஸ் பல்கலைக்கழகம்|பாரிசுக்கு]] கல்வி கற்ற அனுப்பப்பட்டார். இவர் பாரிசில் இருக்கும் போது [[மேற்கு சமயப்பிளவு]] நிகழ்ந்தது. இவர் அச்சமயம் [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அர்பனை]] (1378–89) ஆதரித்தார். பின்னர் [[லோம்பார்டி]]யில் பணியாற்றிய இவர், 1386இல் பியாசென்சாவின் ஆயராகவும், 1387இல் விசென்சாவின் ஆயராகவும், 1402இல் மிலன் நகரின் ஆயராகவும் நியமிக்கப்படார்.
 
1405இல் [[திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட்]] இவரை [[கர்தினால்|கர்தினாலாக]] உயர்த்தினார். இதன்பின்பு இவர் பிளவை முடிவுக்கு கொணர பாடுபட்டார். இதற்காக மார்ச் 25, 1409இல் [[பீசா பொதுச்சங்கம்|பீசா பொதுச்சங்கத்தைக்]] கூட்ட உதவினார். இதனால் [[திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி]]யின் கோவத்துக்கு ஆளாகி தனது கர்தினால் பதவியையும், ஆயர் பதவியையும் இழந்தார். ஆயினும் பீசா பொதுச்சங்கம் தாம் காலியாக இருப்பதாக அறிக்கையிட்ட திருத்தந்தைப்பதவிக்கு இவரை தேர்வு செய்து ஜூன் 26, 1409இல் இவருக்கு முடி சூட்டடியது. இது மற்றுமொரு திருத்தந்தையை உருவாக்கி சிக்கலை பெரிதாக்கியது.
 
இவர் 10 மாதம் மட்டுமே இப்பதவியில் பணியாற்றினார். 3 மே 1410 இரவு இவர் இறந்தார். இவருக்குப்பின்பு [[எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] தேர்வானார்.<ref>Charles A. Coulombe, ''Vicars of Christ: A History of the Popes'', (Kensington Publishing Corp., 2003), 310.</ref><ref>P.M. Savage,''Alexander V, Antipope (Peter of Candia)'', '''New Catholic Encyclopedia''', 2003. HighBeam Research. (செப்டம்பர் 17, 2012).</ref> 1418இல் கூடிய [[காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்]] பீசா பொதுச்சங்கத்தால் தேர்வானவர்களை எதிர்-திருத்தந்தையாக அறிக்கையிட்டது. இக்காலத்தில் நிலவிய குழப்பத்தால் 1492இல் திருத்தந்தையாக தேர்வானவர் [[ஆறாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர்]] என்னும் பெயரை ஏற்றார். இதனால் ''திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்'' என்னும் பெயரை [[திருத்தந்தையின் ஆட்சி பெயர்|ஆட்சி பெயராக]] எத்திருத்தந்தையும் ஏற்க்கவில்லை.
 
== மேற்கோள்கள் ==