அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
[[உமாயூன்]] பாஸ்துன் ([[ஆப்கனிஸ்தான்]]) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான என்ற போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.<ref name="Multiple5">{{cite book|author=Banjerji, S.K.|title=Humayun Badshah}}</ref> [[உமாயூன்|உமாயூனும்]] மனைவியும் [[பாரசீகதேசம்|பாரசீகத்துக்குச்]] சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது [[மத்தியப் பிரதேசம்]] என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது.<ref name="AknamaVolI">{{cite book|author=Fazl, Abul|title=Akbarnama Volume I}}</ref> இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் [[கலைகள்]], [[கட்டடக்கலை]], [[இசை]], [[இலக்கியம்]], காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
 
[[இஸ்லாம் ஷா|இஸ்லாம் ஷாவின்]] (ஷெர் கான் சூரியின் மகன்) [[ஆட்சி]] ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் [[உமாயூன்]] [[டெல்லி|டெல்லியை]] மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ் கொடுத்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து [[உமாயூன்]] இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் வைத்து 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web|accessdate=2008-05-30|url=http://punjabgovt.nic.in/government/gurdas1.GIF|title=Gurdas|publisher=[[Government of Punjab (India)|Government of Punjab]]}}</ref> அக்பர் '''ஷாஹன்ஷா''' ([[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] இதற்கு "அரசருக்கு அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார். அக்பர் காலத்தில் கட்டப்பட்ட [[மசூதி|மசூதியையும்]] , அவர் இறை வணக்கம் செய்த இடத்தையும் இன்றளவும் காண முடியும்
 
== அக்பரின் ஆட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது