மேலக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== புகழ் பெற்றவர்கள் ==
*[[மேலக்கால் வீரபத்திரன்]],மேலக்கால் வீரபத்தரன், இவர் அன்றைய நாளில் (1960) மாவட்ட ஆட்சியர் தேர்வுக்காக நடத்தப்படும் இ.சி. சு (Indian civil service, ICS) தேர்வில் தேர்வானவர். [[பெரியாரியல்|பெரியாரியத்தை ]] பின் பற்றுபவராகவும், [[அம்பேத்கர்|அம்பேத்காரின்]] மாணவராகவும் இருந்தவர். சம உரிமைக்காக மேலக்காலில் இவர் நடத்திய போராட்டங்களால் மாவீரனாக அடையாளப்படுத்தபடுகிறார். [[இம்மானுவேல் சேகரன்]] [[பரமக்குடி]]யில் கொல்லப்பட்டபின், அதன் பின் நடந்த[[முதுகுளத்தூர்]] கலவரங்களுக்கு கரணியமானவர்களை சிறைப்படுத்த வேண்டும் என பல அறப்போராட்டங்களை நடத்தியவர். 1988 இல் நடந்த [[போடி கலவரம்]], [[கொடியங்குளம் நிகழ்வு]] அதையொன்றி [[மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை|தாமிரபரணி கொடுமைகள்]], [[கீழவளவு நிகழ்வு]] என பல நிகழ்வுகளுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தவர்<ref>தலித் கலை ஆதார மையம்- மதுரை</ref>.
பின்னாளில் [[இந்து]] மதத்தின் தீண்டாமை கொடுமையினால் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] மதத்துக்கு மாறினார். இவரை பின்பற்றி பலரும் மேலக்காலில் மதம் மாறியுள்ளனர். இவர் 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இன்றைக்கு மேலக்காலில் பல மாணவர்கள் படித்து [[துபாய்]], [[இசுரேல்]], [[அமெரிக்க]] என்றும், [[சென்னை]]யில் பன்னாட்டு [[மகிழுந்து]] தயாரிக்கும் தொழிற்சாலைகளில் [[பொறியாளர்]] என்றும் , அரசு பணிகளிலும் [[விரிவுரையாளர்]], [[மேற்பார்வையாளர்]] , [[வழக்கறிஞர்]] என சென்றதற்கு வீரப்பத்திரன் இட்ட அடித்தளமே கரணியமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மேலக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது