விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறைந்தது 3 வரி கட்டுரைகள் என்ற விதியில் மாற்றம் தேவை
வரிசை 91:
 
மயூரநாதன், இயல்பான வளர்ச்சி குறித்த தங்கள் மூன்று பரிந்துரைகள் முற்றிலும் பொருத்தமானவை. புதிய பங்களிப்பாளர்களை ஈர்த்து இருக்கிற கட்டுரைகளை மேம்படுத்தத் தொடங்கினாலே பல துறை கட்டுரைகள் தாமாக உருவாகத் தொடங்கும். தகவல் உழவன், கூட்டு முயற்சிக் கட்டுரையின் தாக்கம் சிறிதளவே. ஒட்டு மொத்த விக்கியின் தரத்தை மேம்படுத்த இன்னும் முனைப்பான முயற்சிகள் தேவை. தற்போது கூட்டு முயற்சியில் புதிய கட்டுரைகளைத் தொடங்காவிட்டாலும் கிட்டத்தட்ட புதுக்கட்டுரை அளவிருந்த பல குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உள்ளோம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 04:39, 22 செப்டெம்பர் 2012 (UTC)
 
==குறைந்தது 3 வரி கட்டுரைகள் என்ற விதியில் மாற்றம் தேவை==
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ShortPages&limit=500&offset=18822 2 கிலோ பைட்டுக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை] - 18823. அதாவது மொத்த கட்டுரைகளில் 31%.
 
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ShortPages&limit=500&offset=42136 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை] - 42137. அதாவது மொத்த கட்டுரைகளில் 69%.
 
[[தூது]] என்னும் கட்டுரையை எடுத்துக்காட்டுக்குப் பார்த்தோமானால், 2 கிலோ பைட்டு அளவுடைய இக்கட்டுரையில் தோராயமாக 6 வரிகள் உள்ளன. எனவே, 3 வரிகள் போதும் என்ற நம்முடைய வழிமுறை பல 1 கிலோ பைட்டு அளவுடைய கட்டுரைகளையே சேர்த்திருக்கிறது. அதிலும், ஆங்கில எழுத்துகளைக் காட்டிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துகளுக்கு பைட்டு அளவு அதிகம் என்பதால் இந்த 1 கிலோ பைட்டு அல்லது மூன்று வரிகள் மிகக் குறைவான உள்ளடக்கத்தையே சேர்க்கிறோம்.
 
இவற்றில் பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் தேங்கியுள்ளன.
 
பார்க்க:
 
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:AncientPages பழைய கட்டுரைகள்]
 
பல கட்டுரைகள் ஓரிரு முறைக்கு மேல் இற்றைப்படுத்தப்படுவதேயில்லை.
 
பார்க்க - [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:FewestRevisions குறைவான திருத்தங்களைக் கொண்ட கட்டுரைகள்]
 
அரை பைட்டு அளவு கட்டுரைகள் கூட உள்ளன:
 
பார்க்க: [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ShortPages&limit=500&offset=268 மிகச் சிறிய கட்டுரைகள்]
 
இந்திய அளவில் கட்டுரைகளின் பைட்டு அளவில் பிற விக்கிப்பீடியாக்கள் எப்படி உள்ளன என்பதின் 2012 ஆம் ஆண்டு நிலவரத்தை இங்கு காணலாம்:
 
http://shijualex.in/analysis-of-the-indic-language-statistical-report-2012/
 
இந்நிலைக்குக் காரணம்:
 
(இதில் பெரும்பாலான காரணங்கள் எனது பங்களிப்புக்கும் பொருந்தும்)
 
# ஒரு கட்டுரையில் குறைந்தது 3 வரிகள் இருந்தால் போதும் என்ற விதி
# பிற பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகளைக் கவனித்துப் போதிய அளவு மேம்படுத்தாமை.
# கட்டுரைகளைத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அவ்வப்போது வந்து இற்றைப்படுத்தவோ விரிவாக்கவோ தவறுவது.
# கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கருத்திற் கொண்டு செயற்படுவது.
 
மேற்கூறிய காரணங்களில் 2, 3, 4 ஆகியவற்றை மாற்றிக் கொண்டால் இந்நிலையை மாற்றலாம். ஆனால், உடனடியாக இந்தக் காரணங்களின் தன்மையில் மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்பதால் காரணம் 1ஐக் கவனிப்பது பயன் தரும்.
 
என்னுடைய பரிந்துரை:
 
* கட்டுரைகள் குறைந்தது 3 வரிகள் இருக்க வேண்டும் என்பதனை 6 வரிகள் என மாற்றலாம். இது அனைத்து பயனர்களுக்கும் பொருந்த வேண்டும்.
* 50 கட்டுரைகள் எழுதிய பயனர்கள் யாவரும் புதுப்பயனர் நிலையைத் தாண்டி ஓரளவு விக்கிநெறிமுறைகளை அறிந்தவர்கள் எனக் கருதலாம். இவர்கள் உருவாக்கும் கட்டுரைகள் 5 கிலோ பைட்டு அளவுக்குக் குறையாமலும் பகுப்புகள், மேற்கோள்கள், படங்கள், வெளியிணைப்புகள் கூடியவையாகவும் உருவாக்க வேண்டும்.
 
இந்த விதிக்கான விலக்குகள்:
 
* ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையே 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக இருக்கும் நிலை அல்லது பெரிதாக இருந்தாலும் மொழிபெயர்க்கும் அளவுக்குத் தரமாக இல்லாத நிலை.
* ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகள் ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்கான குறிப்பிடத்தக்கமை உள்ள கட்டுரைகள் (குறிப்பாக, தமிழ் நோக்கில்). போதிய தரவுகள் இல்லாத நிலையில் இவை குறித்து 6 வரிகள் அல்லது 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக எழுதலாம்.
* ஏற்கனவே உள்ள கட்டுரைகளை இந்த விதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம். ஆனால், அவற்றை மேம்படுத்துவதற்கு முனைய வேண்டும்.
 
அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:09, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
 
== இவற்றையும் பார்க்க ==