"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,843 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''நோயெதிர்ப்பியல்''' (Immunology) என்பது அனைத்து [[உயிரினம்|உயிரினங்களின்]] [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்]] குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்<ref>[http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=imm.TOC&depth=2 Janeway's Immunobiology textbook] Searchable free online version at the National Center for Biotechnology Information</ref>. உடல் நலமுள்ள, [[நோய்]]வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோய்கள்]], நோயெதிர்ப்புக் குறைபாடு, [[உறுப்பு மாற்று|உறுப்புமாற்ற நிராகரிப்பு]] ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், [[வேதிப்பொருள்]], உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடச்]] சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். [[அறிவியல்|அறிவியலின்]] பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
"நோயெதிர்ப்பாற்றல்" கருத்துவாக்கம் உருவாகும் முன்னரே பல மருத்துவர்கள் இத்தகுச் செயற்பாடுகளைக் கொண்ட உடல் உறுப்புகளின் பண்புகளை விவரித்திருந்தார்கள். இவை பின்னாளில் நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் கூறுகளாக நிறுவப்பட்டன. [[தைமஸ் சுரப்பி|தைமசும்]], [[எலும்பு மச்சை|எலும்பு மச்சையும்]] நோயெதிர்ப்பாற்றல் முறைமையின் முதன்மையான உறுப்புகளாகும். இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக [[மண்ணீரல்]], உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், [[நிணநீர்க்கணு|நிணநீர் முடிச்சுகள்]], அடினாய்டு சுரப்பிகள், [[தோல்]], [[கல்லீரல்]] ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே [[அறுவைச் சிகிச்சை]] மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும். நோயெதிர்ப்பு அமைப்பின் பல்வேறு கூறுகளும் உயிரணுக்களைச் சார்ந்தவையாக உள்ளதால், எந்தவொரு குறிப்பிட்ட உடலுறுப்புகளுடனும் இவைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. உடல் முழுவதும் பல்வேறு திசுக்களில் இத்தகு உயிரணுக்கள் பொதிந்தும், சுற்றி வந்தும் செயற்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
19,683

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1654179" இருந்து மீள்விக்கப்பட்டது