செறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
இரசாயனவியலில் ஒரு [[கரைசல்|கரைசலில்]] ஒரு அலகுக் கனவளவில் உள்ள குறித்த பொருளின் அளவு அதன் '''செறிவு''' எனப்படும்.<ref name="goldbook">{{GoldBookRef | file = C01222 | title = concentration}}</ref> திணிவு/கனவளவு வீதம், மூலர் திறன், கனவளவு/கனவளவு வீதம் என்பன செறிவின் பிரதான வகைகளாகும். செறிவு அதிகளவில் இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சொற்பதமாகும். இரசாயனவியல் கணிப்புக்களில் கூடுதலாக மூலர்திறனே பயன்படுத்தப்படுகின்றது. செறிவு கூடிய கரைசல் ''செறிவான கரைசல்'' எனவும், செறிவு குறைவான கரைசல் ''ஐதான கரைசல்'' எனவும் அழைக்கப்படும். ஒரு கரைசலைச் செறிவாக்குவதற்குக் கரைசலினுள் மேலதிகமாக கரையத்தைச் சேர்க்க வேண்டும். ஒரு கரைசலை ஐதாக்குவதற்கு கரைப்பானை கரைசலுக்குள் சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு உப்புக் கரைசலைச் செறிவாக்குவதற்கு கரைசலினுள் மேலும் உப்பு சேர்க்க வேண்டும். ஒரு உப்புக்கரைசலை ஐதாக்குவதற்கு அக்கரைசலினுள் நீரைச் சேர்க்க வேண்டும்.
[[File:Dilution-concentration simple exampleta.jpg|thumb|350px|center|இடமிருந்து வலமாகக் கரைசல்களின் செறிவு அதிகரிக்கின்றது.]]
ஒரு கரைசலினுள் ஒரு கரையத்தின் குறிப்பிட்ட அளவு மாத்திரமே கரைய முடியும். அதற்கு மேல் சேர்க்கப்படும் எந்தவொரு கரையமும் கரைசலில் கரையாது. உதாரணமாக நியம நிபந்தனையில் [[சோடியம் குளோரைடு]] நீரின் 1 லீட்டரில் 359 g மட்டுமே கரையும். 400 g உப்பை ஒரு லீட்டர் நீருடன் சேர்த்தால் அதில் 41 g கரையாமல் எஞ்சும். இதன் போது உருவாக்கப்படும் கரைசல் ''நிரம்பிய கரைசல்'' எனப்படும். ஏனெனில் இங்கே சோடியம் குளோரைடு உச்ச செறிவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/செறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது