ஆர். உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
'''ஆர். உமாநாத்''' என்று பரவலாக அறியப்படும் '''இராம்நாத் உமாநாத் செனாய்''' (1922 - 21 மே 2014) [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின்]] ஆட்சிக்குழுவில் (பொலிட்பீரோ) 1998 முதல் அங்கம் வகித்த [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த பொதுவுடமை [[அரசியல்வாதி]] ஆவார்.<ref>[http://www.cpim.org/xix%20cong/0207200pb%20members.htm List of Politburo members]</ref> தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் [[இந்திய தொழிற் சங்க மையம்|சி.ஐ.டி.யூ]]வின் தலைவராகவும் விளங்கியவர்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
1922ஆம் ஆண்டு [[கேரளம்|கேரளத்தின்]] [[காசர்கோடு|காசர்கோட்டில்]]<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref> இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் [[சென்னை|சென்னைக்கு]] குடிபெயர்ந்தார். [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டப்படிப்பின்போது இந்திய பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியல் வாழ்வில் நுழைந்தார். 1940ல் சென்னை சதி வழக்கில் [[ப. ராமமூர்த்தி|பி. ராமமூர்த்தி]]யுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
 
அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்<ref name=UA01>{{cite news|last=Kolappan|first=B|title=CPI(M) leader Umanath passes away|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpim-leader-umanath-passes-away/article6032060.ece|accessdate=21 May 2014|date=21 may 2014}}</ref>. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._உமாநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது