எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Robot: arz:اسبانيا is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 73:
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் [[அரகானின் இரண்டாம் பேர்டினன்ட்|இரண்டாம் பேர்டினன்டுக்கும்]], காசுட்டைலின் அரசி [[காசுட்டைலின் முதலாம் இசபெல்லா|முதலாம் இசபெல்லாவுக்கும்]] இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் [[எசுப்பானிய மொழி]]யைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
 
எசுப்பானியா, [[அரசியல்சட்ட முடியாட்சி]]யின் கீழ் அமைந்ததும், [[நாடாளுமன்ற ஆட்சி முறை|நாடாளுமன்ற முறைமுறையில்]]யில் அமைந்ததுமான ஒரு [[குடியரசு]] நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நேட்டோ]], [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.
 
== பெயர் ==
எசுப்பானியர் தமது நாட்டை ''எஸ்ப்பானா'' (España) என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை ''ஸ்பெயின்'' (Spain) என அழைப்பர். இப்பெயர்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் நிலப்பகுதியைக் குறிக்கும் ஐபீரியா என்பதற்குப் பழைய உரோமர் வழங்கிய பெயர் ''ஹிஸ்பானியா'' (Hispania) என்பது. இது, எசுப்பானியாவைக் குறிக்க வழங்கிய ''ஹெஸ்ப்பீரியா'' என்பதன் கவிதை வழக்காக இருக்கலாம் என்கின்றனர். கிரேக்கர்கள், "மேற்கு நிலம்" அல்லது "சூரியன் மறையும் நிலம்" என்ற பொருளில் இத்தாலியை ''ஹெஸ்ப்பீரியா'' என்றும் இன்னும் மேற்கில் உள்ள எசுப்பானியாவை ''ஹெஸ்ப்பீரியா அல்ட்டிமா'' என்றும் அழைத்தனர்.
 
வரிசை 90:
தொடர்ச்சியான போர்களும், பிற பிரச்சினைகளும் எசுப்பானியாவை ஒரு தாழ்வான நிலைக்கு இட்டுச் சென்றன. எசுப்பானியாவை [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன்]] கைப்பற்றியது பெரும் குழப்பநிலையை ஏற்படுத்திற்று. இது, விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்துப் பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டிலும் அரசியல் உறுதியின்மையை உண்டாக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு எசுப்பானியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. இக்காலத்தில் [[பொருளாதார மந்தநிலை]] ஏற்பட்டதாயினும் இறுதியில் ஆற்றல் மிக்க பொருளாதார வளர்ச்சியையும் எசுப்பானியா கண்டது. காலப்போக்கில் அரசியல் சட்ட முடியரசின் கீழான நாடாளுமன்ற முறை உருவானதுடன் குடியாட்சி மீள்விக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துகொண்டது.
 
=== முன்வரலாறும், உரோமருக்கு முந்திய மக்களும் ===
[[Fileபடிமம்:AltamiraBison.jpg|thumb|left|கான்டபிரியாவில் உள்ள [[அல்டமிரா குகை]] ஓவியங்கள்.]]
[[அட்டப்புவேர்க்கா]] (Atapuerca) என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட [[தொல்லியல்]] ஆய்வுகள் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியத் தீவக்குறையில் [[ஒமினிட்டு]]கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நவீன மனிதர் ஏறத்தாழ 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து ஐபீரியத் தீவக்குறையை அடைந்தனர். இத்தகைய மனிதக் குடியிருப்புக்களைச் சார்ந்த தொல்பொருட்களில் வடக்கு ஐபீரியாவின் கான்டபிரியாவில் உள்ள [[ஆல்ட்டமிரா குகை]]யில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தியகால ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவ்வோவியங்கள் கிமு 15,000 ஆண்டளவில் [[குரோ-மக்னன்]]களால் வரையப்பட்டவை.
 
எசுப்பானியா நாட்டின் தற்போதைய [[மொழி]]கள், [[மதம்]], சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் எசுப்பானியா நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
== புவியியல் ==
[[Fileபடிமம்:Bossòst.jpg|thumb|left|லெரிடா மாகாணத்தில் அமைந்துள்ள, [[பொசோசுட்டு]] என்னும் பைரனீசு நகரம்]]
[[Fileபடிமம்:Playa Sardinero - Santander - Spain.jpg|thumb|[[Sardinero|El Sardinero beach]], [[Santander, Cantabria]]]]
504,782 கிமீ² (194,897 ச. மைல்) பரப்பளவு கொண்ட எசுப்பானியா உலகின் 51 ஆவது பெரிய நாடு. இது [[பிரான்சு]] நாட்டிலும் ஏறத்தாழ 47,000 கிமீ² (18,000 ச மைல்) சிறியதும், [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கலிபோர்னியா]] மாநிலத்திலும் 81,000 கிமீ² (31,000 ச மைல்) பெரியதும் ஆகும். எசுப்பானியா அகலக்கோடுகள் 26° - 44° வ, நெடுங்கோடுகள் 19° மே - 5° கி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
 
எசுப்பானியாவின் மேற்கு எல்லையில் போர்த்துக்கலும்; தெற்கு எல்லையில் பிரித்தானியாவின் கடல் கடந்த ஆட்சிப்பகுதியான [[சிப்ரால்ட்டர்]], [[மொரோக்கோ]] என்பனவும் உள்ளன. இதன் வடகிழக்கில் [[பைரனீசு]] மலைத்தொடர் வழியே பிரான்சுடனும், சிறிய நாடான [[அன்டோரா]]வுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஜெரோனா என்னும் இடத்தில் பைரனீசை அண்டி எசுப்பானியாவுக்குச் சொந்தமான [[லிவியா]] என்னும் சிறிய நகரம் ஒன்று பிரான்சு நாட்டினால் சூழப்பட்டு உள்ளது.
 
=== தீவுகள் ===
[[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] உள்ள [[பலேரிக் தீவுகள்]], அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள [[கனரித் தீவுகள்]], [[சிப்ரால்ட்டர் நீரிணை]]யின் நடுநிலக் கடற் பக்கத்தில் உள்ள ''பிளாசாசு டி சொபரானியா'' ''(இறைமையுள்ள இடங்கள்)'' என அழைக்கப்படும் மனிதர் வாழாத பல [[தீவு]]கள் ஆகியனவும் எசுப்பானியாவின் ஆட்சிப் பகுதிக்குள் வருகின்றன.
 
=== மலைகளும் ஆறுகளும் ===
எசுப்பானியாவின் தலைநிலம் உயர் சமவெளிகளையும், மலைத் தொடர்களையும் கொண்ட மலைப் பகுதியாகும். பைரனீசுக்கு அடுத்ததாக முக்கியமான மலைத்தொடர்கள் [[கோர்டிலேரா கன்டாபிரிக்கா]], [[சிசுட்டெமா இபேரிக்கோ]], [[சிசுட்டெமா சென்ட்ரல்]], [[மொன்டெசு டி தொலேடோ]], [[சியேரா மோரேனா]], [[சிசுட்டெமா பெனிபெட்டிக்கோ]] என்பன. ஐபீரியத் தீவக்குறையில் உள்ள மிக உயரமான [[மலைமுகடு]] [[சியேரா நெவாடா]]வில் உள்ள 3,478 மீட்டர் உயரமான [[முல்காசென்]] ஆகும். ஆனாலும், எசுப்பானியாவில் உள்ள உயரமான இடம் கனரித் தீவுகளில் காணப்படும் உயிர்ப்புள்ள [[எரிமலை]]யான [[தெய்டே]] ஆகும். இது 3,718 மீட்டர் உயரமானது. [[மெசெட்டா சென்ட்ரல்]] என்பது எசுப்பானியாவின் தீவக்குறைப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள பரந்த சமவெளி.
 
எசுப்பானியாவில் பல முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள், [[தகுசு]], [[எப்ரோ]], [[டுவேரோ]], [[குவாடியானா]], [[குவாடல்கிவீர்]] என்பனவும் அடங்குகின்றன. கடற்கரைப் பகுதிகளை அண்டி [[வண்டற் சமவெளி]]கள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது [[அண்டலூசியா]]வில் உள்ள குவாடல்கிவீர் ஆற்றின் வண்டற் சமவெளி ஆகும்.
 
== ஆட்சி ==
[[Fileபடிமம்:Busto de Juan Carlos I de España (2009).jpg|thumb|எசுப்பானியாவின் அரசர் மேதகு [[எசுப்பானியாவின் முதலாம் யுவான் கார்லோசு|முதலாம் யுவான் கார்லோசு]].]]
எசுப்பானியா சர்வாதிகார ஆட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவே 1978 ஆம் ஆண்டின் [[எசுப்பானிய அரசியல் சட்டம் 1978|எசுப்பானிய அரசியல் சட்டம்]] ஆகும். எசுப்பானியாவின் அரசமைப்புச் சட்ட வரலாறு 1812 ஆம் ஆண்டில் தொடங்கியது. குடியாட்சிக்கு மாறுவதற்கான அரசியல் சீர்திருத்தங்கள் மிக மெதுவாக இடம் பெற்றதனால் பொறுமை இழந்த எசுப்பானியாவின் புதிய அரசர் யுவான் கார்லோசு அப்போது பிரதமராக இருந்த கார்லோசு அரியாசு நவாரோ என்பவரை நீக்கிவிட்டு, அடோல்ஃப் சுவாரெசு என்பவரை அப்பதவியில் அமர்த்தினார். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அரசியல் சட்டவாக்க சபையாகச் செய்ற்பட்டுப் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1978 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடம்பெற்ற தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், புதிய சட்டம் 88% வாக்குகளைப் பெற்றது.
 
வரிசை 126:
 
{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
{{country-stub}}
 
[[பகுப்பு:எசுப்பானியா]]
[[பகுப்பு:ஐரோப்பிய நாடுகள்]]
 
{{Link FA|arz}}
 
{{country-stub}}
 
{{Link FA|ia}}
{{Link FA|nah}}
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது