செங்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
:பெண்களில்- 4.5-5 மில்லியன்/µL
 
==செங்குழியத்துடன் தொடர்புடைய நோய்கள்==
[[Image:Sicklecells.jpg|frame|right|Affected by [[Sickle-cell disease]], red blood cells alter shape and threaten to damage internal organs.]]
* [[குருதிச்சோகை]]- குருதியில் செங்குழிய எண்ணிக்கை குறைவடைவதால் அல்லது செங்குழிய வடிவம் விகாரமாவதால் ஏற்படும் நோய் நிலமை. இதனால் உடலில் ஆக்சிசன் கொண்டு செல்லும் வினைத்திறன் குறைவடையும்.
 
:* [[இரும்புச் சத்துக் குறைபாட்டு குருதிச்சோகை]]- உணவில் இரும்புச் சத்து குறைவாக உள்ளமை/ உடலினுள் இரும்புச் சத்து உறிஞ்சப்படல் குறைவடைவதால் ஏற்படும் குருதிச் சோகை. செங்குழிய உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமென்பதால் உருவாக்கப்படும் செங்குழியங்களின் எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும்.
 
:* [[அரிவாள்-கலச் செங்குழிய குருதிச் சோகை]]- இது மரபணு சார்ந்த நோயாகும். மரபணுவில் ஏற்படும் மாறுதலால் உண்டாகின்றது. செங்குழியங்கள் அரிவாள் போன்ற வடிவை எடுக்கின்றன. அவற்றின் மீள்தன்மையும், ஆக்சிசன் காவும் திறனும் குறைவடைகின்றன. குருதிக் கலன்கள் விகாரமுள்ள இக்கலங்களால் அடைக்கப்படலாம். இதனால் வலியும், பக்கவாதமும் ஏற்படலாம். மண்ணீரலும் பாதிக்கப்படலாம்.
:* [[தலசீமியா]]- மரபணு சார்ந்த நோய். ஈமோகுளோபின் உப அலகுகள் சரியான வீதத்தில் உருவாக்கப்படாமையால் ஏற்படும் நோய் நிலமை.
:*[[கோளக் குழியமாதல்]] - மரபணு சார்ந்த நோய். செங்குழிய மென்சவ்வில் ஏற்படும் விகாரத்தால் கலம் சிறிய கோள வடிவத்தை எடுக்கும். இக்கலங்கள் மண்ணீரலில் இவற்றின் விகாரத்தன்மை காரணமாக அழிக்கப்படுவதால், செங்குழிய எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும்.<ref>{{cite journal |author=An X, Mohandas N |title=Disorders of red cell membrane |journal=British Journal of Haematology |volume=141 |issue=3 |pages=367–75 |date=May 2008 |pmid=18341630 |doi=10.1111/j.1365-2141.2008.07091.x}}</ref>
 
* [[செங்குழியச் சிதைவு]]-உருவாக்கப்படும் அளவை விட செங்குழியங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதால் ஏற்படும் நோய் நிலமை.
 
:* [[மலேரியா]]- மலேரியாவை ஏற்படுத்தும் ''Plasmodium'' புரோட்டோசோவா தன் வாழ்க்கை வட்டத்தில் சில காலத்தை செங்குழியத்தினுள்ளே களிக்கும். அது செங்குழியத்தினுள்ளே உள்ள ஈமோகுளோபினை பிரிகையடையச் செய்து காய்ச்சலை ஏற்படுத்தும்.
* செங்குழிய எண்ணிக்கை அதிகரித்தல்- இந்நிலைமை குருதியின் பிசுக்குமையை அதிகரித்து குருதியோட்டத்தைக் குறைக்கும்.
 
* பிழையான [[குருதி மாற்றீடு]] - பொருந்தாத குருதி வகைகளை மாற்றீடு செய்வதால் ஏற்படும் நோய் நிலமை. குருதி வாங்கியின் பிறபொருளெதிரிகள் பொருத்தமில்லாத குருதியிலுள்ள செங்குழியங்களை அழிப்பதால் இறுதியில் இறப்பு நிகழலாம்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செங்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது