உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 34:
 
இதுவே காற்றிற் சுவாசத்தில் அதிகளவான சக்தியைப் பெற்றுத் தரும் இறுதிப் படிமுறையாகும். இதன் போது உள்ளெடுக்கப்பட்ட ஆக்சிசனைப் பயன்படுத்தி, முந்தய படிமுறைகளில் உருவாக்கப்பட்ட NADH, FADH<sub>2</sub> எனபன ஒக்சியேற்றப்பட்டு மீண்டும் NAD+, FAD+ எனபன மீளுருவாக்கப்படுகின்றன. இதன் போது இம்மூலக்கூறுகளிலிருந்து வெளியேற்றப்படும் இலத்திரன்களின் சக்தியைப் பயன்படுத்தி H<sup>+</sup> அயன்கள் இழைமணித்தாயத்திலிருந்து, இழைமணி மென்சவ்விடைப் பிரதேசத்துக்குப் பம்பப்படுகின்றன. பம்பப்பட்ட புரோத்திரன்களால் (H<sup>+</sup> அயன்கள்) இழைமணியின் உள் மென்சவ்வுக்குக் குறுக்கே புரோத்திரன் படித்திறன் உருவாக்கப்படும். இப்படித்திறன் வழியாக இவை மீண்டும் தாயத்துக்குள் ATP Synthase நொதியமூடாகச் செல்லும் போது அவற்றின் சக்தியைப் பயன்படுத்தி அதிகளவான ATP தொகுக்கப்படுகின்றது. உள்நுழையும் H<sup>+</sup> அயன்கள், சக்தி இழந்த இலத்திரன்கள் ஆகியவற்றுடன் ஆக்சிசன் இணைந்து கழிவுப் பொருளாக நீர் உருவாகின்றது. இலத்திரன் இடம்மாற்றல் சங்கிலி மூலம் உச்சமாக 34 ATP வரை உருவாக்க முடியும்.
 
==நொதித்தல்==
[[File:Cellular respiration ta.png|thumb|400px|கலச்சுவாச வகைகளான காற்றிற் சுவாசத்துக்கும் நொதித்தலுக்கும் இடையிலான ஒப்பீடு.]]
ஆக்சிசன் இல்லாத போது [[நொதித்தல்]] இடம்பெறுகின்றது. நொதித்தலில் ஒப்பீட்டளவில் மிகக்குறைவான சக்தியே பெறப்படுகின்றது. நொதித்தலின் போதும் கிளைக்கோபகுப்பு நடைபெறுவதுடன் கிளைக்கோபகுப்பில் உருவாகும் பைருவேற் மேலதிக ஒக்சியேற்றலுக்காக இழைமணிக்குள் அனுப்பப்படுவதில்லை. அது உருவாகிய NADHஐ ஒக்சியேற்றி மீண்டும் NAD+ உருவாக்கப் பயன்படுகின்றது. ஏனெனில் அடுத்த நொதித்தல் தாக்கத்துக்கு NAD+ தேவையாகும். எனவே இங்கு ஒரு குளுக்கோசு மூலக்கூறுக்கு 2 ATP சக்தி மாத்திரமே தோற்றுவிக்கப்படுகின்றது. இரு வகையான நொதித்தல் செயன்முறைகள் உள்ளன. முதலாவது வகையான இலக்திக் அமில நொதித்தல் இறுதி கழிவுப் பொருளாக இலக்திக் அமிலத்தை உருவாக்கும் நொதித்தல் வகையாகும். இலக்திக் அமில நொதித்தல் மிகவும் கடுமையான தசைச்சுருக்கங்களில் மனித [[தசை]] நார்களில் உபயோகிக்கப்படுகின்றது. இரண்டாவது வகை நொதித்தல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த [[எத்தனால்]] நொதித்தல் ஆகும். இது பொதுவாக [[மதுவம்|மதுவத்தால்]] சக்திப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. உருவாக்கப்படும் கழிவுப் பொருளான எத்தனோல் குடிபானமாகவும், எரிபொருளாகவும் மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.
==சுவாசத் தொகுதியின் பங்களிப்பு==
ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது