கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 65:
== வரலாறு ==
[[File:JocelinSeal.jpg|thumb|கிளாசுக்கோவின் நிறுவனரும் கிளாசுக்கோவின் பேராயருமான ஜோசுலின் உருவுடனான சின்னம் அல்லது முத்திரை.]]
கிளாசுக்கோ தற்போதுள்ள இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருப்பு இருந்து வந்துள்ளது. கிளைடு ஆற்றின் மேற்பகுதியில் மொலென்தினார் பர்ன் சிற்றோடையுடன் கலக்குமிடத்தில் ஆறாம் நூற்றாண்டில் புனிதர் முங்கோ தேவாலயமொன்றை அமைத்திருந்தார். கிளாசுக்கோவிலிருந்து 15 மைல்கள் தொலைவில் அமைந்த டம்பர்டனைத் தலைநகராகக் கொண்டிருந்த இசுட்ராத்கிளைடு இராச்சியம் 9வது நூற்றாண்டில் மற்ற பகுதிகளுடன் இணைந்து [[இசுக்காட்லாந்து இராச்சியம்]] உருவானது.<ref name="ReferenceA">The City of Glasgow - The Third Statistical Account of Scotland , published 1958</ref> இசுகாட்லாந்தின் இரண்டாவது பெரிய பேராய பீடமாக கிளாசுக்கோ நகரம் வளர்ந்தது. 10வது, 11வது நூற்றாண்டுகளில் இந்த பேராயப் பீடத்தை இசுகாட்லாந்தின் முதலாம் டேவிடும் பேராயர் ஜானும் சீரமைத்த பிறகு கிளாசுக்கோ மேலும் முதன்மை பெற்றது.
 
1707இல் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களுக்குப்]] பின்னர், இசுக்காட்லாந்திற்கு புதிய பிரித்தானியப் பேரரசின் விரிந்த சந்தைக்கு அணுக்கம் கிட்டியது; இந்த உலகளாவிய வணிக வாய்ப்பிற்கான முதன்மை வாயிலாக கிளாசுக்கோ அமைந்தது. அமெரிக்காக்களுக்குடனான சர்க்கரை, புகையிலை, பருத்தி மற்றும் ஆக்கப்பட்ட பொருட்களுக்கான வணிகம் வளர்ந்தது.<ref>Harris, Nathaniel (2000). ''Heritage of Scotland'', pg. 70. Checkmark Books, London. ISBN 0816041369.</ref> அமெரிக்காவிலிருந்து புகையிலை இறக்குமதி செய்து செல்வந்தர்களான வணிகர்கள் (''வர்ஜினியா டான்சு'') கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் ஆழ்நீர் துறைமுகமாக கிளாசுக்கோத் துறைமுகம் கட்டினர்.<ref>[http://www.ltscotland.org.uk/abolition/ Abolition of the Slave Trade]. ''Learning and Teaching Scotland'' Online. Retrieved on 26 September 2007</ref> 18வது நூற்றாண்டில் பிரித்தானியப் புகையிலை வர்த்தகத்தில் பாதிக்கும் மேற்பட்டு இங்குதான் நிகழ்ந்தது. உச்சநிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் {{convert|47000000|lb|tonnes|abbr=on}} புகையிலை இறக்குமதி செய்யப்பட்டது.<ref>{{cite web|url=http://www.theglasgowstory.com/story.php?id=TGSCE03|title=The Glasgow Story: Industry and Technology&nbsp;— Food, Drink and Tobacco|publisher=The Glasgow Story|year=2004|accessdate=29 July 2008|first=Ian|last=Donnachie}}</ref>
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது