பாப்லோ நெருடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 93 interwiki links, now provided by Wikidata on d:q34189 (translate me)
சி சிறுதிருத்தம்
வரிசை 8:
1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னையென்றாலும் நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார். நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெருந்தாய் என்று பெருமிதம் கொள்வார். முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, இவருடைய பெருந்தாயைப் பற்றிய‌தே.
 
பாப்லோ நெருடா என்ற புனைப்பெயருடன் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, இவருடைய 19ஆம் வயதில் " இழந்தவைகறைக் காதல்கதிர்கள் (Books of Twilights) "<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; பாப்லோ நெருடா; பக்கம் 195</ref> என்ற பெயரில் [[1923]] ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது நெருடாவின் "இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது.
 
[[1927]]ஆம் ஆண்டு சிலியின் தூதராக அவர் ரங்கூன் ([[பர்மா]]) சென்றார். ஆறு ஆண்டுகள் [[இலங்கை]]யிலும், சிங்கப்பூரிலும், ரங்கூனிலும் அவர் தூதராகப் பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மாபெரும் இலக்கியவாதிகளான, [[ப்ராஸ்ட்]], [[ஜேம்ஸ் ஜாய்ஸ்]], [[வால்ட் விட்மன்]] போன்றவர்களுடைய எழுத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/பாப்லோ_நெருடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது