கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
அழகிய நீல நிறத்துடன் தோன்றும் இந்த ஏரியின் கரையில் பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச்செடிகளும் அமைந்து இதற்கு அழகூட்டுகிறன. இதன் கரையில் சிறு மலைகள் இருக்கின்றன. இப்பகுதி மிகவும் செழிப்பான இடம். கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களும், பசுமையான செடி கொடிகளும் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுகின்றன. மிதமான வெப்பமுடைய நீர் இந்த ஏரியிலுள்ளதும் இதற்குக் காரணம்.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் மீன்பிடிக்கும் தொழில் செழித்தோங்கி வந்துள்ளது. 230 படகுகள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்ததாக முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர் [[ஜொசிஃபஸ்|ஃபிளாவியுஸ் ஜோசேஃபஸ் (''Flavius Josephus'')ஜொசிஃபஸ்]] என்பவர் கூறுகிறார். இந்த ஏரியில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு தூய பேதுரு மீன் (''St. Peter's Fish'') என்னும் சிறப்புப் பெயர் உண்டு.
 
அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், [[எர்மோன் மலை]]யிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கலிலேயக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது