வைக்கிங் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎top: படிமம்
(*துவக்கம்*)
 
(→‎top: படிமம்)
[[File:Vikings-Voyages.png|thumb|right|400px|வைக்கிங் தேடுதல்கள் பெரும்பான்மையான [[ஐரோப்பா]], [[நடுநிலக் கடல்]], வடக்கு [[ஆப்பிரிக்கா]], [[அனத்தோலியா]], [[ஆர்க்டிக்]] [[வட அமெரிக்கா]] என நெடுந்தொலைவிற்கு விரிந்திருந்தது.]]
 
'''வைக்கிங் காலம்''' (''Viking Age'') எனப்படுவது [[ஐரோப்பிய வரலாறு|ஐரோப்பிய வரலாற்றில்]] கி.பி 793 முதல் 1066 வரையிலானக் காலமாகும். குறிப்பாக [[வடக்கு ஐரோப்பா]] மற்றும் [[எசுக்காண்டினாவியா]]வின் வரலாற்றில் செருமானிய இரும்புக் காலத்திற்கு பிறகான காலமாகும்.{{sfn|Forte|Oram|Pedersen|2005|p=2}} வரலாற்றின் இக்காலத்தில் எசுக்காண்டினாவிய நோர்சுமன்கள் ஐரோப்பாவை கடல்வழியாகவும் ஆறுகள் வழியாகவும் சென்றடைந்து படையெடுப்புக்களையும் கைப்பற்றுகைகளையும் மேற்கொண்டு வணிகத்தைப் பரப்பிய காலமாகும். இந்தக் காலத்தில் [[வைக்கிங்]]குகள் நோர்சு கிரீன்லாந்து, [[நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்|நியூபவுண்டுலாந்து]], தற்கால [[பரோயே தீவுகள்]], [[ஐசுலாந்து]], [[நார்மாண்டி]], [[இசுக்கொட்லாந்து|எசுக்காண்டினாவிய இசுக்கொட்லாந்து]], [[உக்ரைன்]], [[அயர்லாந்து]], [[உருசியா]] மற்றும் [[அனத்தோலியா]] ஆகிய இடங்கில் குடியேறினர்.<ref>Terry MacKinnell, The Dawning, p.189, Xlibris Corporation, 2011</ref> வரலாற்றின் பலகாலங்களிலும் வைக்கிங் பயணிகளையும் குடியேற்றங்களையும் காண முடிந்தாலும் இக்காலத்தில் இடம் பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாவர். கூடிய மக்கள்தொகை, வணிக சமநிலையின்மை, வேளாண்மைக்கேற்ற நிலமின்மை போன்றவையே இந்த வெளியேறலுக்கும் மற்ற நாடுகள் மீதான ஆக்கிரமிப்பிற்கும் காரணமாக வரலாற்று ஆவணங்கள் சுட்டுகின்றன. வைக்கிங் காலத்திற்கான பெரும்பான்மைத் தகவல்களுக்கு ஐசுலாந்திய சாகாசிடமிருந்தே பெறப்படுகின்றன.
 
== மேற்சான்றுகள் ==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1708808" இருந்து மீள்விக்கப்பட்டது