திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pope Francis South Korea 2014.png
சி இற்றைப்படுத்தல்
வரிசை 442:
ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். 10 மணிக்கு பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்கினார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். வெளிநாட்டு மறைபரப்பாளர்கள் கொரியாவில் கிறித்தவத்தைக் கொணரவில்லை, மாறாக, கொரியா நாட்டு பொதுமக்களில் சிலர் சீன நாடு சென்று, அங்கு வாழ்ந்த கிறித்தவர்களிடமிருந்து கிறித்தவப் போதனைகளைக் கற்று, அவற்றைத் தம் சொந்த நாட்டிலும் பரப்பினார்கள். தமது சமய நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று, கொரியா மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் ஏன் உலக மக்கள் அனைவருக்குமே அவர்கள் தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
 
பின்னர், கோட்டோங்னே (Kkottongnae) என்ற ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களாக 70 பேரை சந்தித்து ஒரு மணி அளவு நேரம் செலவிட்டார். அவர்களுள் சிலர் தங்கள் ஊனங்கள் காரணமாக மருத்துவப் படுக்கைகளிலும் சக்கர வண்டிகளிலும் இருந்தனர். அவர்களை ஒருவர் ஒருவராக சந்தித்து, வாழ்த்துக் கூறி அவர்களுக்காக செபம் ஒப்புக்கொடுத்தார்.
பின்னர், ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரை உரையாற்றினார். அதுபோலவே, பொதுநிலையினரோடும் சந்திப்பு நிகழ்ந்தது.
 
மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரை சந்தித்து உரையாற்றினார். துறவியர், கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதிகள் அளிப்பதன் வழியாக, தங்கள் கிறித்தவ அழைத்தலை அதிக ஆர்வத்தோடு ஏற்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, ஏழைகளோடு தங்களை ஒன்றுபடுத்திக் கொண்டு, செல்வத்தை நம்பியிராமல் எளியவர்களாக வாழவேண்டும் என்றும் கூறினார்.
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் சீனாவிலிருந்து ஆயர்கள் பங்கேற்க வழியிருக்குமா என்பது தெரியவில்லை. மாலையில் ஆசிய இளையோர் நாள் நிறைவுத் திருப்பலி நிகழ்கிறது.
 
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளான 70 ஆயர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: கத்தோலிக்க திருச்சபை வெற்றி மமதை கொண்ட மனப்பான்மையோடு இங்கு வரவில்லை. ஆயர்கள் ஆசிய நாடுகளின் பண்பாடுகளை மதித்து, கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடித்து, பிறரோடு பகிரவேண்டும். உரையாடல் மிக முக்கியம். ஆசியா பெருநிலத்தில், திருப்பீடத்தோடு முழு உறவு இன்னும் ஏற்படுத்தாத நாடுகள் இந்த உரையாடல் மனப்பான்மையோடு உறவுகள் ஏற்படுத்த முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். உரையாடல் என்பது அரசியம் துறையில் மட்டுமல்ல, சகோதர மனப்பான்மையோடு நிகழ்வதாகவும் இருக்க வேண்டும்.
 
ஆசியாவில், சீன நாடு 1951இல் திருப்பீடத்தோடு ஆட்சி உறவுகளை முறித்துக்கொண்டது. வட கொரியா நாட்டில் சமய சுதந்திரம் இல்லை. அங்கு கிறித்தவர்களும் மிகச் சிலரே என்று தெரிகிறது. அவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வட கொரியாவோடும் திருப்பீடத்திற்கு அரசியல் உறவுகள் இல்லை.
 
கொரியாவுக்கு வான்வழியாகப் பயணம் சென்ற திருத்தந்தை பிரான்சிசின் விமானம் சீன நாட்டு வான் எல்லையில் பறந்த போது, வழக்கம்போல, திருத்தந்தை பிரான்சிசு சீன அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
 
ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களை சந்தித்து உரையாற்றுகிறார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்துகிறார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது