கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தஞ்சாவூர் கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்''', [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[தஞ்சாவூர்]] கரந்தட்டாங்குடியில் உள்ளது.இப்பகுதியில் சமணர் வாழ்கின்றனர். சோழ நாட்டில் [[கும்பகோணம்]], [[மன்னார்குடி]], தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன. <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
புகழ் பெற்ற கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம் என்றழைக்கப்படும் சமண ஆலயம் உள்ளது. இக்கோயில் கரந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஜைன பாடசாலை அருகில் ஜைனர் தெருவில் உள்ளது.
 
==கோயில் அமைப்பு==
ஆதீஸ்வர சுவாமி ஜினாலயம் எனப்படும் இக்கோயிலுள்ள மூலவர் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும், ஆலயத்திலுள்ள முன் மண்டபம், ஜினவாணி ஆலயம், சாஸன தேவ தேவியர் சன்னதிகள் போன்றவை சுமார் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆலயத்திலுள்ள மூலவர் முதலாம் தீர்த்தங்கரரான ஸ்ரீரிஷபதேவர் ஆவார். தமிழகத்திலுள்ள சமண ஆலயங்களிலேயே ஜினவாணிக்கெனத் தனியாக கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், சுற்றுப்பிரகாரம் என அனைத்தும் ஒரு தனி கோயிலுக்கான அம்சங்களுடன் அமைந்திருப்பது இங்குள்ள தனிச்சிறப்பாகும். தவிரவும் ஸ்ரீகுந்தகுந்தாசாரியார் திருவுருவம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி மற்றும் நவக்கிரகங்களுக்கென சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மேலும் 16 தூண்களுடனான பூஜை மண்டபம் தனியே உள்ளது. கோவிலுக்கென நந்தவனமும் குளமும் உள்ளன. <ref name="st">சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009 </ref>
 
== மூலவர் ==
கோயிலின் மூலவராக ஆதீஸ்வரசுவாமி எனப்படும் ஆதிநாதர் உள்ளார். மூலவர் முதலாம் தீர்த்தங்கரரான ஸ்ரீரிஷபதேவர் ஆவார்.
 
== வழிபாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கரந்தை_ஆதீஸ்வரசுவாமி_ஜினாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது