வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 10:
| known_for = Bio-crystallography
| prizes = [[:பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்|வேதியியலுக்கான நோபல் பரிசு]] (2009).
| footnotes =
}}
'''வெங்கி ராமகிருஷ்ணன்''' என அழைக்கப்படும் '''சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்''' (''Sir Venkatraman Ramakrishnan'', பிறப்பு: [[1952]])<ref name="2009 Nobel Prize in Chemistry">[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/ 2009 Nobel Prize in Chemistry], Nobel Foundation.</ref>, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும்<ref>[http://www.sciencecentric.com/news/article.php?q=09100741-the-nobel-prize-chemistry-is-going-ramakrishnan-steitz-yonath The Nobel Prize in chemistry is going to Ramakrishnan, Steitz, Yonath]</ref> [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் [[உயிரியல்|உயிரியலாளரும்]] ஆவார்<ref>[http://www.mrc-lmb.cam.ac.uk/ramak/ Ramakrishnan Home Page]</ref>. அனைத்து [[உயிரணு]]க்களிலும் உள்ள [[ரைபோ கரு அமிலம்]] மற்றும் [[புரதம்|புரதங்களின்]] சிக்கலான அமைப்பான "[[ரைபோசோம்]] (''ribosome'') எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் [[தாமஸ் ஸ்டைட்ஸ்]], மற்றும் [[அடா யோனட்ஸ்]] ஆகியோருக்கும் [[2009]] ஆம் ஆண்டுக்கான [[:பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்|வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.<ref>http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/info.pdf The ribosome – a target for new antibiotics</ref> நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது [[தமிழர்]] ராமகிருஷ்ணன்<ref>[http://thatstamil.oneindia.in/news/2009/10/07/tn-nobel-laureates-of-india.html நோபல் பரிசை வென்ற 3வது தமிழர் வெங்கி!], தட்ஸ்தமிழ்</ref>. இவருக்கு முன்னர் [[ச. வெ. இராமன்]] (1930), [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]] (1983) ஆகியோர் நோபல் பரிசைப் பெற்றிருந்தனர். இவருக்கு 2011 திசம்பர் 31 இல் பிரித்தானிய அரசு [[சர்]] பட்டம் வழங்கிக் கௌரவித்தது<ref>[[n:நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்|நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்]], விக்கிசெய்திகள், சனவரி 1, 2012</ref>.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வெங்கட்ராமன் [[1952]] இல் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார்,<ref name="2009 Nobel Prize in Chemistry" />. அவரது தந்தையின் பணி காரணமாக [[குஜராத்]]திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள [[வடோதரா]] நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார்<ref>[http://ibnlive.in.com/news/inbox-flooded-nobel-lauerate-venkatraman-complains/103214-11.html?from=tn?from=rssfeed Inbox flooded, Nobel lauerate Venkatraman complains], ஐபிஎன் லைவ், அக்டோபர் 13, 2009</ref>. [[இயற்பியல்|இயற்பியலில்]] பட்டப்படிப்பை [[மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்|பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்]] [[1971]] ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் [[1976]] இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஒகையோ பல்கலைக்கழகம்|ஒகையோ பல்கலைக்கழகத்தில்]] இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்<ref>[http://news.rediff.com/report/2009/oct/07/ramakrishnan-wins-chemistry-nobel.htm news.rediff.com]</ref><ref>[http://web.archive.org/web/20091009233520/http://www.ptinews.com/news/318589_Venkatraman-Ramakrishnan-wins-Nobel-for-Chemistry Venkatraman Ramakrishnan wins Nobel for Chemistry], PTI</ref>. அதன் பின்னர் [[சான் டியேகோ]], [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)|கலிபோர்னியா பல்கலைக்கழக]]த்தில் ஓராண்டு காலம் [[உயிரியல்]] துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி [[1978]] இல் முடித்தார்<ref name = "iex">[http://www.indianexpress.com/news/profile-dr-venkatraman-ramakrishnan/526251/ Profile: Dr Venkatraman Ramakrishnan], Associated Press, 7 அக்டோபர் 2009</ref>.
 
=== கல்விக்குடும்பம் ===
வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜல‌ஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார் <ref>[http://timesofindia.indiatimes.com/india/My-son-has-always-followed-his-heart-C-V-Ramakrishnan/articleshow/5099772.cms டைம்ஸ் ஆவ் இந்தியா ]</ref>. இவரது தமைக்கையார் [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.
 
=== நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC) ===
தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது.<ref>[http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் மின்னஞ்சல் நேர்காணல்]</ref>
 
== துறை-சார் அனுபவங்கள் ==
* 1978-821978–82 [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தில்]] [[வேதியியல்]] பிரிவில் முனைவர்-பட்டத்திற்குப் பின்னான ஆய்வாளர் -- "E கோலை"யின் சிறியதொரு [[ரைபோசோம்]] துணையலகினால் நியூட்ரான் சிதறல் பற்றியது<ref name="timesofindia.indiatimes.com">http://timesofindia.indiatimes.com/india/Venkatraman-Ramakrishnan-A-profile/articleshow/5098151.cms</ref>
* 1983-951983–95 புரூக்கேவன் தேசிய ஆய்வகத்தின் உயிரியல் பிரிவில் பணி:
** 1983-851983–85 உதவி உயிரி-இயற்பியலாளர்.
** 1985-881985–88 துணை உயிரி-இயற்பியலாளர்.
** 1988-901988–90 உயிரி-இயற்பியலாளர்.
** 1990-941990–94 பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட உயிரி-இயற்பியலாளர்.
** 1994-951994–95 பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட மூத்த உயிரி-இயற்பியலாளர்.
** 1995-991995–99 [[யூட்டா பல்கலைக்கழகம்|யூட்டா பல்கலைக்கழகத்தில்]] [[உயிரியல்]] பிரிவில் பேராசிரியர்; மூலக்கூறு உயிரியல், உயிரி வேதியியல் பிரிவு முதுகலைத் திட்டக்குழு உறுப்பினர்.
* 1999-
** 1999- இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் உள்ள MRC ஆய்வகத்தின் குழுத்தலைவர்;
வரிசை 51:
 
== நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனின் ஆய்வு ==
ராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய<ref name="timesofindia.indiatimes.com" />, 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/info.pdf The small subunit’s “double checking”]</ref>.
 
=== ஆய்வின் முக்கியத்துவம் ===
ரைபோசோம்களின் அமைப்பினடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்குதலில் இவரது ஆய்வு பயன்படுகிறது.<ref>[http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் வெங்கட்ராமனின் மின்னஞ்சல் நேர்காணல்]</ref>
 
== பிற விருதுகள் ==
:* 2008 -- இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் (INSA) அயல் நாட்டாய்வாளவர் பதவி.
:* சில ஆண்டுகளுக்கு முன் -- இந்திய அறிவியல் நிலையத்தின் (IISc) '''ஜீ.என்.ராமசந்திரன் ஆய்வாளர்''' பதவி.<ref>[ http://beta.thehindu.com/news/article30476.ece இந்து நாளிதழில் ]</ref>
:* [[2010]] -- இந்திய அரசின் குடிமை-சார்ந்த விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசண்]].
 
வரிசை 76:
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது