"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அணுவின் உட்கருவிலுள்ள [[புரோட்டான்கள்|புரோட்டான்களின்]] [[உட்கரு மின்சுமை]] அதிகமாக இருந்தால் அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். அதிகளவு புரோட்டான் மின்சுமை எலக்ட்ரான்களை அதிக விசையுடன் பிணைத்திருக்கும். இவ்விசையில் இருந்து வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
 
[[மெக்னீசியம்|மெக்னீசியத்தின்]] உட்கரு மின்சுமை ( 12 புரோட்டான்கள் ) [[சோடியம்| சோடியத்தின்]] உட்கரு மின்சுமையை விட ( 11 புரோட்டான்கள் ) அதிகமாகும். எனவே மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் சோடியத்தின் அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும்.
 
== உள்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ==
 
அணுவின் வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரான்மீது அணுக்கரு செலுத்தும் ஈர்ப்பு விசையானது உள்கூட்டிலுள்ள எலக்ட்ரானின் விலக்குவிசையினால் ஈடு செய்யப்படுகிறது. நீக்கப்படவேண்டிய எலக்ட்ரானானது அணுக்கருவின் ஈர்ப்பு விசையிலிருந்து உள்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களால் மறைக்கப்படுகிறது. இதனால் [[இணைதிறன்]] கூட்டிலுள்ள எலக்ட்ரான் அணுக்கருவினால் குறைந்த அளவே ஈர்க்கப்படுகிறது. எனவே அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது. தனிம வ்ரிசை அட்டவணையில் உள்ல ஒரு தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது அயனியாக்கும் ஆற்றல் குறைவதற்கு இதுவே காரணமகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715513" இருந்து மீள்விக்கப்பட்டது