சிரவணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
உபநிடத, வேதாந்த வாக்கியங்களை ஆறு (ஷட்) வகையான லிங்கங்கள் (அடையாளங்கள்) மூலம் அனைத்து வேதாந்த உபநிடதங்களுக்கும் இரண்டற்ற வஸ்துவான [[பிரம்மம்| பிரம்மமே]] அடிப்படையானது என்று உறுதிப்படுத்திக் கொள்வதே சிரவணம் ஆகும்.<ref>http://www.poornalayam.org/classes-recorded/introduction/introduction-to-vedanta/</ref>
 
==ஆறு லிங்கங்கள் (ஷட் லிங்கம்) மூலம் சிரவணம் செய்தல்==
1. உபக்கிரமம் - உபசம்ஹாரம் 2. அப்பியாசம் 3. அபூர்வதா 4. பலம் (பலன்/பிரயோசனம்) 5. அர்த்தவாதம் 6. உப்பத்தி
 
===1. உபக்கிரமம் - உபசம்ஹாரம்===
வேதாந்தத்தில் சொல்ல முற்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியின் கருத்தை, அப்பகுதியின் தொடக்கத்திலும் முடிவிலும் கூறுவதை உபக்கிரமம் - உபசம்ஹாரம் என்பர். எடுத்துக்காட்டு: [[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தில்]] ஆறாம் அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் கருத்தாக உள்ள “இரண்டற்ற பரம்பொருள்” என்பதை அப்பகுதியின் தொடக்கத்தில் `ஒன்றே; அது இரண்டற்றது` என்றும் (சாந்தோக்கிய உபநிடதம் 6. 2 1), இறுதியில் `அதுவே அனைத்தின் [[ஆத்மா|ஆத்மாகவாகவும்]] உள்ளது` (6. 8. 7) என்றும் கூறப்பட்டுள்ளது.
 
===2. அப்பியாசம்===
வேதாந்தத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூறவந்த கருத்தை, இடையிடையே திரும்பத் திரும்ப வலியுறுத்துவது ''அப்பியாசம்'' ஆகும். எடுத்துக்காட்டு: சாந்தோக்கிய உபநிடத பகுதியிலேயே `நீயும் அதுவே` ([[தத்துவமசி என்ற மகாவாக்கியம்|தத் த்வம் அஸி]] என்று இரண்டற்ற பரம்பொருளானது ஒன்பது முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மீண்டும் சொற்களாலும், பொருளைப் பயன்படுத்தியும் வலியுறுத்தி விளக்குவதே அப்பியாசம் ஆகும்.
 
===3. அபூர்வதா===
''அபூர்வதா'' என்பது மற்ற பிரமாணங்களால் தெரிந்து கொள்ள இயலாமல் உள்ள, மற்ற பகுதிகளில் இல்லாத விசயமாக இருப்பின் அதனை அபூர்வதா என்பர். வேதாந்தத்தில் குறிப்பிட்ட பகுதியில் கூறவந்த கருத்தானது, வேறு எந்த முறையிலும் தெரிந்து கொள்ள இயலாததாக இருப்பது ஆகும். எடுத்துக்காட்டு: சாந்தோக்கிய உபநிடதப் பகுதியில் இரண்டற்ற பரம்பொருள், [[உபநிடதம்| உபநிடதங்களைத்]]தவிர வேறு எவ்வகையாலும் தெரிந்து கொள்ள இயலாததாக இருப்பது ஆகும். மற்ற பிரமாணங்களால் (நூல்கள் எனும் கருவிகள்) தெரிந்து கொள்ள இயலாமல் உள்ள, மற்ற பகுதிகளில் இல்லாத விசயமாக இருப்பின் அதை அபூர்வதா எனப்படும். இவ்விசயத்தை உபநிடதங்கள் தவிர வேறு எதனாலும் நமக்குப் [[பிரம்மம்|பரம்பொருள்]] குறித்த அறிவானது அறிய இயலுவதில்லை.
 
===4. பலம் (பலன்/பிரயோசனம்)===
வேதாந்தத்தில் ஒரு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கு விவரிக்கப்பட்டுள்ள [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானமோ]] அல்லது அதை அனுசரிக்கும் முறைகள் போன்றவையோ பலம் அல்லது பிரயோசனம்/பலன் எனப்படும். ([[குரு]]விடமிருந்து பெற்ற கல்வி மட்டுமே முழுமையான பலன் அளிக்கும். எடுத்துக்காட்டு: சாந்தோக்கிய உபநிடதத்தின் ஒரு பகுதியில் [[குரு|சற்குருவைப்]] பெற்ற ஒருவன் [[பிரம்மம்|பிரம்மத்தை]] அறிகிறான். முன்பு செய்த கர்மவினைகளால் ஏற்பட்டுள்ள இந்த உடல் அழியும் வரையில் பொறுத்துக் கொள்ள வேண்டும். [[சீவ முக்தி]] பெற்றவன், உடல் அழிந்த பிறகு உறுதியாக [[விதேக முக்தி]] அடைவான். அதன் பின் அவன் பிரம்மத்துடன் இணைந்து விடுகிறான். ([[சாந்தோக்கிய உபநிடதம்]] 6. 14. 2) என்று இம்முறையில் இரண்டற்ற பிரம்மத்தை உணர்ந்தவன், அதை அடைவதை பிரயோசனமாக/பலனாகக் கூறப்பட்டுள்ளது நன்கு கேட்டறிய வேண்டும்.
 
===5. அர்த்தவாதம்===
''அர்த்தவாதம்'' எனில் புகழ்ந்து கூறுவதாகும். வேதாந்தாத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூறவந்த கருத்தை பல இடங்களில் புகழ்ந்தும், உயர்வாகக் கூறுவது அர்த்தவாதம் ஆகும். எடுத்துக்காட்டு: [[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தில்]] `எதனால் இதுவரை கேட்கப்படாமல் இருந்தது கேட்கப்பட்டதகாக ஆகுமோ, இதுவரையில் சிந்திக்கப்படாமல் இருந்தது சிந்திக்கப்பட்டதாகுமோ, அறியப்படாமல் இருந்தது அறியப்பட்டதாகுமோ அந்த உபதேசத்தைச் செய்யும்படி (குருவிடம்) கேட்டாயா?` (சாந்தோக்கிய உபநிடதம் 6. 1. 3) போன்ற சொற்கள் மூலம் இரண்டற்ற பரம்பொருளைப் புகழ்ந்து உயர்த்திப் பேசுகிறது.
 
வேதங்களில் அர்த்தவாதங்களைப் பல இடங்களில் காணப்படுகிறது. கடைப்பிடிக்கத் தக்க அம்சங்களைப் புகழ்வது அல்லது விலக்கத் தக்க அம்சங்களை இகழ்வது ஆகும். இதன்மூலம் வேத வேதாந்த சாத்திரங்களில் நம்பிக்கை உள்ள ஒருவன் விலக்கத்தக்க அம்சங்களை விலக்கி, பின்பற்றத் தக்கவைகளை ஏற்றுக் கொள்வதாகும்.
 
===6. உப்பத்தி===
ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூற வந்த கருத்திற்கு ஆதாரமாகப் பல இடங்களில் அளிக்கப்படும் விளக்கங்களை உபபத்தி அல்லது [[தருக்கம்]] என்பர். உதாரணத்துடன் கூடிய தர்க்கம்தான் உபபத்தியாகும். எடுத்துக்காட்டு சாந்தோக்கிய உபநிடததம் (6. 1. 4) `அன்பிற்கு உரியவனே, எப்படி களிமண்ணை தெரிந்து கொள்வதன் மூலம் களிமண்ணால் செய்யப்பட்டுள்ள பாணைகள் முதலிய அனைத்தும் தெரிந்துவிடுமோ, எந்த ஒரு மாறுதலுமே பேச்சின் முயற்சியாக, பெயராக மட்டும் இருப்பதால், களிமண் ஒன்று மட்டுமே அதில் உண்மையானதாக இருப்பதால்` என்னும் சொற்கள் எல்லா மாறுதல்களுமே வெறும் பெயர்கள் மட்டுமே என்னும் வாதத்தின் மூலம் இரண்டற்ற பரம்பொருளை நிலைநாட்டுவதற்காகக் கூறப்பட்டுள்ளது.
 
களிமண்ணானது காரணப் பொருள் ஆகும். பாணை, சட்டி, ஓடு, பொம்மை போன்றவையெல்லாம் களிமண்ணின் விளைவினால் உண்டான காரியப் பொருட்கள் ஆகும். காரியப் பொருளான பாணை, சட்டி, ஓடு அணைத்தும் களிமண்ணே. அவற்றில் பெயர் மற்றும் வடிவமானது தற்காலிமானதுதான். நிலையற்ற, காரியப் பொருட்களில் நாம் உண்மையில் அறிய வேண்டியது காரணப் பொருளை மட்டுமே. அது போலவே இவ்வுலகத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே மூலத்தில் பிரம்ம வஸ்துவே ஆகும். அது ஒன்றுதான் உணமையானது ஆகும். பெயருடனும், வடிவத்துடனும் காணப்படும் இந்த உலகமானது பொய் ஆகும் (வெறும் தோற்றமே/மித்யா).
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணை==
==உசாத் துணை==
* [[வேதாந்த சாரம் (நூல்)]], நூலாசிரியர், ஸ்ரீசதானந்த யோகீஸ்வரர், வெளியீட்டாளர்கள், இராமகிருட்டிண மடம்.
* [http://www.sacred-texts.com/hin/sbe34/index.htm வேதாந்த சூத்திரம், ஆதிசங்கரரின் விளக்க நூல், பகுதி 1]
"https://ta.wikipedia.org/wiki/சிரவணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது