வில்லியம் ஆர்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
"'''வில்லியம் ஆர்வீ''' (William Harvey..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''வில்லியம் ஆர்வீ''' (William Harvey ஏப்பிரல் 1, 1578-சூன் 3,1657) என்பவர் ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார். குருதி இதயத்திலிருந்து தொடங்கி உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற்கே வந்து சேருகிறது என்ற குருதி ஓட்டம் பற்றிய புதிய தகவலை தம் ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்து வெளியிட்டார். இந்தக் கண்டுப்பிடிப்பு மருத்துவத்துறையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உதவியாக இருந்தது என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
{{unreferenced}}
[[படிமம்:William Harvey 2.jpg|thumb|right|வில்லியம் ஹார்வி]]
'''வில்லியம் ஹார்வி''' (''William Harvey''; ஏப்ரல் 1, 1578 - சூன் 3 1657) [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.
 
==பிறப்பும் படிப்பும்==
இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
 
இங்கிலாந்தில் கென்டில் உள்ள போக்ச்டன் என்னும் ஊரில் பிறந்தார். தமது 16 ஆம் அகவையில் கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கலையையும் மருத்துவத்தையும் பயின்றார். வில்லியம் ஆர்விக்கு மருத்துவம் படிக்கக் கொள்ளை ஆசை. ஆகையால் இத்தாலி நாட்டில் உள்ள பதுவா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1602 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
[[பகுப்பு:ஐக்கிய இராச்சிய மருத்துவர்கள்]]
உடற் கூறுப் பேராசிரியர் பெப்ரிசியஸ் என்பவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்.அவரிடம் வில்லியம் ஆர்வி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1602 இல் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பினார். கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மற்றொரு
[[பகுப்பு:1578 பிறப்புகள்]]
மருத்துவப் பட்டமும் பெற்றார்.
[[பகுப்பு:1657 இறப்புகள்]]
 
==திருமணம்==
 
1604 ஆம் ஆண்டில் எலிசபெத் பிரவுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
 
==தொழிலும் ஆராய்ச்சியும்==
 
1607 இல் வில்லியம் ஆர்வி இலண்டனில் உள்ள ராயல் மருத்துவர் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் தொழிலைச் செய்துகொண்டே தமக்குப் பிடித்தமான குருதி ஓட்டம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
1616 இல் தாம் செய்து வந்த குருதி ஓட்டம் பற்றியும் இதயம் தமனிகள் சிரைகள் முதலியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்
மாகவும் விரிவாகவும் மருத்துவ மாணவர்களிடம் கூறி வந்தார்.
இதயம் சுவாசக்கோசங்களின் உதவியுடன் குருதியை ஏற்றுக்கொண்டு மறுபடியும் வெளியே அனுப்புகிறது என்றும் இரத்த ஓட்டம் என்பது தடைபெறாமல் நடைபெறும் ஒரு சுழற்சி என்றும் இதைத் இதயத் துடிப்பு மூலம் உணரலாம் என்றும் கூறினார். இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கேலி செய்து சக மருத்துவர்கள் நகைத்தனர். ஆனால் தளர்ச்சி அடையாமல் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
 
1628 இல் 'இதயம் இரத்தம் -இவற்றின் இயக்கம்' என்னும் ஓர் ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இதற்குப் பிறகு ஆர்வியின் ஆய்வுகளை உண்மையென மற்ற மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர். இதயம் என்பது ஒரு பம்பு போல வேலை செய்து குருதியைத் தமனிகள் மூலம் உடலெங்கும் உந்தித் தள்ளி அனுப்புகிறது. இந்தக் குருதி தமனிகளிலிருந்து சிரைக்கு மாறி மீண்டும் இதயத்துக்கு வருகிறது. குருதிக் குழல்களில் உள்ள குருதி பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வால்வுகள் உதவுகின்றன.அதாவது குருதி ஓட்டம் எப்போதும் இதயத்தை நோக்கியே இயங்குகிறது என்று சான்றுகளுடன் ஆர்வி விளக்கினார். தம் கருத்துகளை தக்கச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க, இறந்த விலங்குகளின் உடல்களையும் மனித உடல்களையும் வெட்டிச் சோதனை செய்தார். 1651 ஆம் ஆண்டில் 'விலங்குகளின் தலைமுறைகள்' என்னும் தலைப்பில் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இக்கால 'கரு' ஆராய்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. சிறந்த மருத்துவராகப் பலராலும் பாராட்டப்பட்ட வில்லியம் ஆர்வீ முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஆங்கில மன்னர்களுக்கு மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள் நூல்==
 
கதை கதையாம் காரணமாம் (ஆசிரியர்-வாண்டு மாமா, கங்கை புத்தக நிலையம், தியாகராயநகர்,சென்னை-17)
 
[[பகுப்பு: மருத்துவ அறிவியல் அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஆர்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது