சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Reverted 1 edit by Krishnamoorthy1952 (talk) identified as vandalism to last revision by JayarathinaAWB BOT. (TW)
வரிசை 20:
}}
'''சிலந்திகள்''' அல்லது '''எட்டுக்கால் பூச்சிகள்''' என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் [[கணுக்காலி]] வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை [[நூலாம்படை]] என்றும், சிலந்தியை ''நூலாம்பூச்சி'' <ref>{{செ.ப.|பக்கங்கள்=|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+&matchtype=exact&display=utf8}}</ref> என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையா. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751&nbsp; வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு &nbsp;<ref>Platnick, N. I. 2012. The world spider catalog, version 12.5. American Museum of Natural History, online at http://research.amnh.org/iz/spiders/catalog. DOI: 10.5531/db.iz.0001. பார்க்கக் கிடைக்கும் தளம் (பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2012) [http://research.amnh.org/iz/spiders/catalog/COUNTS.html]</ref> விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.<ref>Kuhn-Nentwig, Lucia, Stocklin, Reto, Nentwig, Wolfgang, "Venom Composition and Strategies in Spiders: Is Everything Possible?" in Jerome Casas (Ed), Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology, Volume 40, Academic Press 2011</ref>. சிலந்திகள் [[அராக்னிடா]] (''Arachnida'') என்னும் [[வகுப்பு (உயிரினம்)|வகுப்பில்]], சிலந்திப்பேரினம் அல்லது ''அரனியே'' (''Araneae'') என்று அழைக்கப்படும் [[வரிசை (உயிரினம்)|வரிசையில்]] உள்ள உயிரினம்.
 
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன. இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது. ‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன.
‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.
 
== உடல் கூறு இயல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது