அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*சொந்தக் கருத்து போல உள்ளது *
வரிசை 26:
| Influences =
}}
 
'''அப்துல் காதிர் அல்-ஜிலானி''' (''Abd al-Qadir al-Jilani'', {{lang-ar|عبد القادر الجيلاني}}, {{lang-ku|Evdilqadirê Geylanî}}, 1077–1165).இவர் [[ஈராக்]]கில் உள்ள [[ஜீலான்]] என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார். இவர்கள் காதிரிய்யா என்ற இஸ்லாமிய [[சூபி]] சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த மிகவும் பிரசித்தி பெற்றவரும்,
செல்வாக்குள்ளவருமாகிய "குத்புஸ்ஸமான்" ஆன்மீகப் பட்டம் பெற்ற இஸ்லாமிய [[சூபி]] அறிஞர், ஆசிரியர், மதகுரு, எழுத்தாளர் ஆவார்கள்.
வரி 35 ⟶ 36:
கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக [[ஈராக்]]கின் [[பக்தாத்]] நகருக்கு சென்றார்கள். பக்தாத் மாநகரம் ஜீலானிலிருந்து 400 மைல்களுக்கப்பால் இருந்தது. ஒரு நாள் நாற்பது வணிகர்கள் இருநூறு ஒட்டகங்களில் தமது வியாபாரச் சாமான்களை ஏற்றிக்கொண்டு பக்தாத் செல்லவிருப்பதாகக் கேள்வியுற்ற கௌதுல் அஃலம் அவர்கள், வணிகக்கூட்டத்தினருடன் சேர்ந்து அங்கு செல்ல விரும்பினார்கள். தமது இந்த விருப்பத்தை அன்னையிடம் கூறியபோது கௌதுல் அஃலம் அவர்களுடைய சட்டையின் உட்புறத்தில் 40 பொற்காசுகளை வைத்துத் தைத்துக் கொடுத்து தமது மகனிடம் எச்சந்தர்ப்பத்திலும் பொய் பேசக்கூடாது என்று புத்திமதி கூறி அன்னையவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.
 
வணிகக்குழு ஹமதான் நகரைக் கடந்து தர்தங் என்னும் காட்டினூடே சென்று கொண்டிருந்தபோது திடீரென கொள்ளைக்கூட்டமொன்று இடைமறித்துத் தாக்கி பொருட்களையெல்லாம் கொள்ளையடித்தது. இவ்வளவு ரகளை நடந்தும் சற்றேனும் அமைதி குலையாதவராக நின்றுகொண்டிருந்த கௌதுல் அஃலம் அவர்களைக் கண்ட கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் ஆச்சரியப்பட்டு ' உன்னிடம் என்ன உள்ளது?' என வினவினான். சற்றும் தாமதியாது என்னிடம் 40 பொற்காசுகள் உள்ளன என்று கூறினார்கள். இது கேட்ட தலைவன் 'அவற்றை எங்கே வைத்திருக்கின்றீர்?' என்றபோது கௌதுல் அஃலம் அவர்கள் தமது விலாப்பக்கத்தைக் காட்டினார்கள். உடனே கொள்ளைக்கூட்டத்திலொருவன் விலாப்பக்கத்துச் சட்டையின் உட்புறத்திலிருந்த 40 பொற்காசுகளையும் எடுத்து தலைவனிடம் கொடுத்தான். ஏன் நீர் உண்மை கூறினீர்? என்று தலைவன் கேட்டதிற்கு, கௌதுல் அஃலம் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் பொய்யுரைக்கக்கூடாது என்ற தனது அன்னையின் கட்டளையைச் சொன்னார்கள். கௌதுல் அஃலம் அவர்களது தோற்றம், நடவடிக்கைகள், உரையாடிய முறை ஆகியவற்றை அவதானித்த தலைவன், தனது கூட்டத்தினரிடம் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடுக்குமாறு கட்டளையிட்டதுடன், தான் இன்றுடன் இந்தக் கேவலமான தொழிலை விட்டுவிடுவதாகக்கூறித், தன் சகாக்களோடு நேர்வழியில் நடக்க உறுதியளித்தான். இந்தச் சம்பவம் கௌதுல் அஃலம் அவர்களது உண்மைத் தன்மையையும், உறுதியையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
 
கௌதுல் அஃலம் அவர்கள் பக்தாத் நகரத்தின் அப்போதைய போலி வாழ்க்கையில் வெறுப்புற்று பல தடவைகள் நகரத்தை விட்டுச் செல்ல நினைக்கும் போதெல்லாம் ஒரு அசரீரி "போகவேண்டாம் இங்கேயே இரு எல்லாம் எய்தப்பெறுவீர்" என்று இடித்துரைத்தது கேட்டு, நகரத்திலேயே இருந்து தமது கல்வியைத் தொடரவும், ஆன்மீகப் பயிற்சியைக் கடைப்பிடிக்கவும் தீர்மானித்தார்கள்.
 
பெரியார் அபுல்கைர் ஹம்மாது அல்தப்பாஸ் (ரலி) அவர்களுடைய மாணாக்கராக இருந்து தமது ஆன்மீகப் பயிற்சியைத் தொடங்கினார்கள் கௌதுல் அஃலம் அவர்கள். மூன்று ஆண்டுகள் பயிற்சியின் பின்னர் கௌதுல் அஃலம் அவர்கள் புடம் போட்ட தங்கமாக மிளிர்ந்தார்கள். ஒரு தடவை பெரியார் அபுல்கைர் ஹம்மாது அல்தப்பாஸ் (ரலி) அவர்கள் " இந்த அப்துல் காதிர் எதிர்காலத்தில் மாண்புநிறை இறைநேசராகவும், இறைநேசர்களின் அரசராகவும் விளங்குவார் " என்று கூறினார்.
 
== புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதிர்_அல்-ஜிலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது