துருக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பழங்காலம்: *திருத்தம்*
வரிசை 80:
 
=== துருக்கியரும் ஓட்டோமான் பேரரசும் ===
கினிக் ஓகுஸ் துருக்கியர்களின் ஒரு பிரிவினரான [[செல்யூக்]] குழுவினர், ஒன்பதாம் நூற்றாண்டில் [[கஸ்பியக்காசுப்பியன் கடல்|கஸ்பியக் கடலுக்கும்]], [[ஆரல் கடல்|ஆரல் கடலுக்கும்]] வடக்கே முஸ்லிம் உலகின் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் செல்யூக்குகள் தமது தாயகத்தில் இருந்து அனத்தோலியாவின் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். 1071 இல் இடம்பெற்ற [[மான்சிகேர்ட் போர்|மான்சிகேர்ட் போரைத்]] தொடர்ந்து இப் பகுதிகள் செல்யூக்குகளின் புதிய தாயகம் ஆனது. செல்யூக்குகள் பெற்ற இவ்வெற்றி, [[அனத்தோலிய செல்யூக் சுல்தானகம்|அனத்தோலிய செல்யூக் சுல்தானகங்கள்]] என்னும் அரசுகள் தோன்றக் காரணமாகியது. இவை, [[மத்திய ஆசியா]]வின் சில பகுதிகள், [[ஈரான்]], அனத்தோலியா, தென்மேற்கு ஆசியா ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பெரிய பேரரசின் ஒரு தனிப்பிரிவுகளாக இருந்தன.
 
1243 ஆம் ஆண்டில், செல்யூக் படைகள் [[மங்கோலியா|மங்கோலியர்]]களால் தோற்கடிக்கப்பட, செல்யூக் பேரரசு மெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. இதே வேளை, [[முதலாம் ஒஸ்மான்]] என்பவரால் ஆளப்பட்ட துருக்கியப் பகுதியொன்று [[உதுமானியப் பேரரசு|ஓட்டோமான் பேரரசாக]] வளர்ச்சியுற்றது. இது செல்யூக்குகளினதும், பைசண்டியர்களினதும் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது.
 
ஓட்டோமான் பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/துருக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது