ப. அர. நக்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
No edit summary
வரிசை 1:
'''ப. அர. நக்கீரன்''' என்பவர் தமிழக எழுத்தாளர். சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ற நூல்களைநூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ''"முழுத்தர மேலாண்மை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. <ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
 
வரிசை 8:
 
* கிண்டி பொறியியற் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த இவர், குரோம்பேட்டையில் உள்ள (M.I.T.)-யில் உற்பத்தி பொறியியல் துறையில் துறைத் தலைவராகவும் பணியாற்றி விட்டு, பிறகு அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியற் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழக அரசின் தமிழ்க் கலைச்சொல் பேரகராதி உருவாக்கத்திட்டத்தின் தனி அலுவலராகவும் பணியாற்றினார்.
* அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியஆசிரியப் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அண்ணா செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்பு (ANNA EDUSAT) நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
* பல பட்ட, மேற்பட்ட மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.
* [[தமிழ் இணையப் பல்கலைக் கழகம்‎|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின்]] இயக்குனராகஇயக்குநராக 11.9.2006 முதல் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.
 
 
==சிறப்புக்கள்==
 
* "அளவையியல்" (Metrology) சோதனைக் கூடங்களை வடிவமைத்து நிறுவி, அதனை ஒரு பாடமாகப் புகுத்தியமையும், இந்தியாவிலேயே முதன் முறையாக ‘எந்திர மின்னணுவியல்’ (Mecatronics) என்ற மேற்பட்டப் படிப்பை தொடங்கியமையும் இவரின் பெருமைக்குபெருமைக்குச் சான்றுகளாகும்.
* எந்திரவியல் துறையில் பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
* இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்களிலும், கருந்தரங்குகளிலும்கருத்தரங்குகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அறிவியல் தலைப்புகளில் வானொலியில் பல உரைகளை ஆற்றியுள்ளார்.
* உற்பத்திப் பொறியியல் துறையில் அளவையியல், தரக் கட்டுப்பாடு, முழுத்தர மேலாண்மை, பராமரிப்புப் பொறியியல் மற்றும் கணினிச் சார்ந்த உற்பத்திப் பொறிகள் ஆகியவற்றில் வல்லுநர்.
* பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராக செயலாற்றி, தற்பொழுது சென்னைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
* இன்று அண்ணா பல்கலைக்கழக காலாண்டிதழான களஞ்சியம் என்ற இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
* இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
* அமெரிக்காவின் FETNA அமைப்பும், இந்தியாவின் QCFI நிறுவனமும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரப்படுத்தியுள்ளது. மேலும், QCFI-யின் சென்னைக்கிளை இவருக்குஇவருக்குத் தரவட்டத்தின் வளர்ச்சிக்காகவளர்ச்சிக்காகப் பாடுபட்டதிற்கான நிகரில்லா பங்களிப்பு விருதை வழங்கியுள்ளது.
 
==தமிழ் இணைய மாநாட்டுக் குழு உறுப்பினர்==
"https://ta.wikipedia.org/wiki/ப._அர._நக்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது