ரெனே டேக்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் ரேனே தேக்கர்ட்ஸ், ரெனே டேக்கார்ட் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 21:
இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
என்ன தான் ரேனே கணிதத்தில் நல்ல ஆர்வம் காட்டினாலும், அவர் மனதில் ஆன்மா தொடர்ப்பான பல சந்தேகங்கள் இருந்தன. மேலும் அவர் மதங்களை நம்பினாலும் அதனுள் காணப்படும் உண்மைகளை மட்டுமே ஆராயும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இருந்த மதச் சடங்குகளை தவிர்த்து அதன் வழி அறிவியல் ஆராய்ச்சியை நடத்தினார். இவர் மனித வாழ்வின் முடிவு என்ன? அதே போல் ஆரம்பம் என்ன? நம்மை கடவுள் தான் உருவாக்கினார் என்றால் அவருக்கு அந்த அளவிற்கு யார் சுதந்திரம் தந்தது என்ற கேள்விகளை தன்னுள் எழுப்பிக்கொண்டு அதற்கான விடைகளை தேட ஆரம்பித்தார். நாம் வாழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா? நீங்களும் நானும் பிறந்ததிற்கு ஏதேனும் காரணம் உண்டா? என அனைத்தையும் ஆராய்ந்தார். அப்போது தான் அவருக்கு பொறி தட்டியது இவற்றை பற்றி நாம் சிந்திக்கிறோம் ஆனால் நம் சிந்தனை பற்றி நாம் உணருவதில்லை என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. பின் தனது சிந்திக்கும் திறனை ஆராய்ந்தார். சிந்தனை என்ற ஒரு செயல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக இருப்பதை உணர்ந்தார். மேலும் அவையே மனிதனுக்கு இருக்கும் சக்திகளில் மிக வலிமை வாய்ந்தது எனவும் கருதினார். இறுதில் இவர் தனது ஆராச்சியின் முடிவை, "[[நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்]]" (Thought cannot be separated from me, therefore, I exist. ''I think, therefore I am"'') என தனது குறிப்பேட்டில் எந்தவித சந்தேகமின்றி எழுதினார்.
 
மேலும் மதங்களில் காணப்படும் தூய ஆவி, மற்றும் சாத்தான்களை பற்றி ஆராய்ந்து அவைகள் மனிதர்களால் மனிதர்களுக்கு திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் மட்டுமே என்று கூறினார். இதனால் இவர் பல வழக்குகளை சந்தித்தார். ஆவிகளை ஆராயும் பணியில் இவர் தன்னை ஒரு ஆவி போல கற்பனை செய்து கொண்டார். பின்னர் அதன் உருவம், செயல் அனைத்தையும் கற்பனை செய்ய அவருக்கு மனம் தேவைப்பட்டது. அப்போது தான் அவருக்கு மனம் தொடர்பான சந்தேகம் எழுந்தது. மனம் என்றால் என்ன? அதுவும் கூட ஒரு வகையான சிந்தனையின் வெளிப்பாடுதான் என சிந்தித்தார். ஆகவே மனம் என்பது மூளை கொடுத்த சிந்தனையின் அதீத வெளிபாடு மட்டுமே என்று கூறினார். இந்த ஆராய்ச்சிக்காக இவர் தனது வீட்டை 17ம் நூற்றாண்டில் மாற்றியமைத்தார். இவரின் அறை ஒரு அடுப்பை போன்றது. அந்த அறையின் உட்புறத்தில் வெப்பம் வெளியிடுமாறு பலவகை முன் ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆகையால் அக்காலத்தில் இவரை பலர் மனநோயாளி என்று நினைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ரெனே_டேக்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது